வாழ்வை முடித்துக்கொள்ள சுவிட்சர்லாந்துக்குச் சென்ற பெண்: பிரித்தானிய பிரதமரால் கவனம் ஈர்க்கவிருக்கும் வழக்கு
மருத்துவர்கள் உதவியுடன் வாழ்வை முடித்துக்கொள்வதற்காக சுவிட்சர்லாந்துக்குச் சென்ற பிரித்தானிய பெண் ஒருவருக்கு உதவியதாக, அறிவியலாளர் ஒருவர் தவறுதலாக கைது செய்யப்பட்டார்.
தற்போது அவர் பிரித்தானிய பொலிசார் மீது வழக்குத் தொடர முடிவு செய்துள்ளார்.
வாழ்வை முடித்துக்கொள்ள சுவிட்சர்லாந்துக்குச் சென்ற பெண்
பிரித்தானியரான ஷாரன் ஜான்ஸ்டன் (59) என்னும் பெண் கீழே விழுந்ததில் அவரது கை கால்கள் செயலிழந்தன.
பக்கவாதத்தால் அவதியுற்று வந்த ஷாரன், த்னது அன்றாடகத் தேவைகளுக்காக மற்றவர்களையே நம்பியிருக்க வேண்டியிருந்ததால், சுவிட்சலாந்துக்குச் சென்று மருத்துவர்கள் உதவியுடன் தனது வாழ்வை முடித்துக்கொள்ள முடிவு செய்தார். இது நடந்தது 2022ஆம் ஆண்டு.
Photograph: Sarah Lee/The Guardian
மற்றொரு பிரித்தானியரும் மானுடவியல் அறிவியாளருமான மிராண்டா டக்கட் என்னும் பெண், சுவிட்சர்லாந்துக்குச் சென்று மருத்துவர்கள் உதவியுடன் தனது வாழ்வை முடித்துக்கொள்ளும் பிரித்தானியர்களைக் குறித்து முனைவர் பட்டம் பெறுவதற்காக ஆய்வு மேற்கொண்டு வந்தார்.
அவரது ஆய்வுக்குட்பட்டவர்களில் ஷாரனும் ஒருவர்.
சுவிட்சர்லாந்துக்குச் சென்று ஷாரன் மருத்துவர்கள் உதவியுடன் தனது வாழ்வை முடித்துக்கொள்ள, அவருடன் சென்றிருந்த மிராண்டா சூரிச்சிலிருந்து 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் திகதி லண்டன் திரும்ப, பொலிசார் அவரை கைது செய்துள்ளார்கள்.
11 மணி நேரம் யாரையும் தொடர்புகொள்ள முடியாமல் காவலில் அடைக்கப்பட்ட மிராண்டா, பின்னர் ஆறு மாதங்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
பொலிசார் மீது வழக்கு
அப்போது மிராண்டாவின் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர், தற்போதைய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர்.
Photograph: Family handout
அவரது முயற்சியால்தான் மிராண்டா பொலிசிலிருந்து காவலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஷாரன், சுவிட்சலாந்துக்குச் சென்று மருத்துவர்கள் உதவியுடன் தனது வாழ்வை முடித்துக்கொள்ள தான்தான் முடிவு செய்ததாக பலமுறை பொலிசாருக்கு தெரிவித்தும், குறுஞ்செய்தி அனுப்பியும், அவருக்கு உதவியதாக தவறாக கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டார் மிராண்டா.
ஆகவே, தன்னைக் கைது செய்து காவலில் அடைத்த பொலிசார் மீது வழக்குத் தொடர முடிவு செய்துள்ளார் மிராண்டா.
அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஸ்டார்மர் இப்போது பிரதமராகியுள்ளதால், இந்த வழக்கு கவனம் ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |