நகை, பணத்தை ஏமாற்றி கேரளாவுக்கு தப்பிச் சென்ற பட்டதாரி பெண்: தாயால் சிக்கியது எப்படி?
தமிழக மாவட்டம், கன்னியாகுமரியைச் சேர்ந்த பட்டாதாரி பெண் ஒருவர் நகை மற்றும் பணத்தை ஏமாற்றி கேரளாவுக்கு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய் புகார்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கன்றுபிலாவிளை கொற்றிகோடு பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ரெஜிலின் மனோ மற்றும் அஜி (32). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இதில் கணவர் ரெஜிலின் மனோ வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அஜி தனது 2 குழந்தைகளுடன் ஊரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், தனது தாயிடம் தோழி வீட்டிற்கு செல்வதாக கூறி தனது 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். ஆனால், அவர் வீடு திரும்பவில்லை.
இதனால், தனது மகளுக்கு ஏதோ ஆகிவிட்டதென்று அஜியின் தாயார் பிரேமா பொலிசில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.
கேரளாவில் கைது
இதனிடையே, கொற்றிக்கோடு மற்றும் தக்கலை பகுதியில் நகை மற்றும் பணத்தை அஜி ஏமாற்றியதாக பலரும் பொலிசில் புகார் அளித்தனர். பின்பு, பொலிசார் அஜியை தேடும் பணிகளில் இறங்கினர்.
அப்போது, கேரள மாநிலம் பாறசாலை பகுதியில் அஜி தங்கியிருப்பதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், பாறசாலை பொலிசார் உதவியுடன் அஜியை கேரளாவில் கைது செய்து தமிழகத்திற்கு அழைத்து வந்தனர்.
இதன் பிறகு, தக்கலை நீதிமன்றத்தில் அஜி ஆஜர்படுத்தப்பட்டு, தக்கலை பெண்கள் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |