பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் போர் உருவாகும் சூழலை உருவாக்கிய இந்த பெண் ஒரு மீனவரின் மகள்!
பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் போர் உருவாகும் சூழலை உருவாக்கியுள்ள பெண் அமைச்சர், ஒரு மீனவரின் மகளாம். பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானால் கடல்வள அமைச்சராக பொறுப்பு அளிக்கப்பட்டுள்ள Annick Girardin (56), பிரெக்சிட்டை வெறுப்பவர்.
உலகம் முழுவதும் ஆங்கிலம் வியாபித்து வரும் நிலையில், ஆங்கிலத்திடமிருந்து பிரெஞ்சு மொழியைக் காப்பாற்றுவதற்காக தெருவில் இறங்கிப் போராடியவராம் Annick.
பிரெஞ்சு மீன்பிடி படகுகளுக்கு உரிமம் வழங்குவது தாமதப்படுவதற்கு எதிராக தொடர்ந்து போராடி வந்த Annick உருவாக்கிய பிரச்சினை, இன்று 100 பிரெஞ்சு மீன்பிடி படகுகள் ஜெர்சி துறைமுகத்தை சூழ்ந்துகொள்ள, பிரித்தானிய பிரதமர் பிரச்சினைகளை சமாளிக்க இரண்டு ஆயுதம் தாங்கிய போர்க்கப்பல்களை அனுப்பும் வரையில் கொண்டு வந்துவிட்டுள்ளது.
தன்னை ஒரு கடல் கொள்ளையரின் ஆன்மா என அழைத்துக்கொள்ளும் Annick, வாழ்வில் எத்தனையோ போராட்டங்களைக் கண்டும் எதைக் குறித்தும் கவலைப்படாத மன நிலை கொண்டவராம்.
Brittanyயில் பிறந்த Annick, மீன்பிடித்தலை மட்டுமே நம்பி வாழும் ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர். 15 வயதில் ஒரு மாணவியாக இருக்கும்போதே Annick ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்ததால், பள்ளி செல்வதற்கும் குழந்தையை கவனித்துக்கொள்வதற்கும் இடையில் போராடியிருக்கிறார்.
பள்ளி இறுதி ஆண்டு வகுப்புகளுக்கு நான் செல்வதற்கு முன் என் மகளை நான் நர்சரியில் சேர்த்துவிட்டேன் என்பாராம் Annick. ஆரம்பத்தில் பல்வேறு வேலைகள் செய்த Annick, 1999இல் அரசியலில் ஈடுபடத் துவங்கியுள்ளார்.
2017ஆம் ஆண்டு இமானுவல் மேக்ரான் பிரான்ஸ் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டபோது, பிரான்சுக்கான கடல் கடந்த அமைச்சராக பொறுப்பேற்ற Annickக்கு, 2020இல் மேக்ரானாலேயே கடல்வளத்துறை அமைச்சர் என்ற பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த பொறுப்புடன், பிரெஞ்சு மீன்வர்கள் மீது பிரெக்சிட் ஏற்படுத்தும் தாக்கத்தை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார் Annick. அதில் சமீபத்தையதுதான், ஜெர்சி தீவுப்பகுதியில் மீன்பிடிக்க போராடுவது!