நடுவானில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கழிவறைக்கு கொண்டு செல்லப்பட்ட பெண்: விமானப்பயணிகளை கலங்கடித்த சம்பவம்
விமானத்தில் நடுவானில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், பயணிகள் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் பயணிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நடுவானில் உயிரிழந்த பெண்
ஞாயிற்றுக்கிழமை மாலை, ஸ்பெயிலிருந்து இங்கிலாந்து நோக்கி பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த பெண் ஒருவர் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டார்.
அந்த விமானம் Tenerife என்ற இடத்திலிருந்து மான்செஸ்டர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது.
அப்போது, பெண் பயணி ஒருவரை அவருடன் வந்த ஆண் கழிவறைக்கு அழைத்துச் செல்வதை சக பயணிகள் கவனித்துள்ளார்கள். அந்தப் பெண் கடுமையான வலியால் துடித்துக்கொண்டிருந்திருக்கிறார்.
Credit: Alamy
சட்டென மாறிய சூழல்
அவரை படுக்கவைத்து, அவரிடம் அவரது வலி எப்படி இருக்கிறது என விமானப் பணியாளர்கள் விசாரித்துக்கொண்டிருக்க, திடீரென சூழல் மாறியுள்ளது.
பரபரப்படைந்த பணிப்பெண்கள், விமானத்தில் மருத்துவர்கள் யாராவது இருக்கிறார்களா என விசாரிக்கத் துவங்க, உடனடியாக விமானம் Newquay என்ற இடத்தில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
விமானப் பணியாளர்கள் தொடர்ந்து அந்த பயணிக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிப்பதை பயணிகள் பார்த்து அதிர்ச்சியில் அமர்ந்துகொண்டிருந்திருக்கிறார்கள். துயரமான செய்தி என்னவென்றால், அந்தப் பெண் உயிரிழந்துவிட்டார்.
ஆனால், அவர் யார், எதனால் அவர் உயிரிழந்தார் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
கண் முன்னே பயணி ஒருவர் உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியில் பயணிகள் உறைந்திருக்க, விமானம் 10.00 மணியளவில் மான்செஸ்டரைச் சென்றடைந்துள்ளது.
Credit: theelliemo