ரூ.22 லட்சம் சம்பளம் பெற்ற பெண்.., நான்காவது முயற்சியில் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி
கல்லூரி வேலைவாய்ப்பில் ரூ.22 லட்சம் சம்பளத்தை பெற்ற பெண் ஒருவர் நான்காவது முயற்சியில் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
ரூ.22 லட்சம் சம்பளம்
இந்திய மாநிலமான ஹரியானா, ஜிந்த் மாவட்டத்தில் உள்ள கோசைன் கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கிதா பன்வர்.
கிராமத்தில் வசித்த இவர் பள்ளிப் படிப்பை முடித்து 97.6 சதவீத மதிப்பெண் பெற்றார். பின்னர், JEE அட்வான்ஸ் தேர்ச்சி பெற்று ஐஐடி ரூர்க்கியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார்.
அதன்பிறகு, கல்லூரி வேலைவாய்ப்பில் 22 லட்ச ரூபாய் சம்பளத்தையும் பெற்று 2 ஆண்டுகள் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றினார்.
UPSC தேர்வு மற்றும் சிவில் சர்வீசஸில் அதிக ஆர்வம் கொண்டிருந்த அங்கிதா, முதல் முயற்சியில் தோல்வி அடைந்து 2020 இல் இரண்டாவது முறையாக UPSC தேர்வை எழுதி 321 வது இடத்தைப் பிடித்தார்.
இருந்தாலும் திருப்தி அடையாமல் மூன்றாவது மற்றும் நான்காவது முயற்சிகளை மேற்கொண்டார். 2022 இல் நான்காவது முயற்சியில் UPSC தேர்வில் 28 வது அகில இந்திய தரவரிசையுடன் தேர்ச்சி பெற்று IAS அதிகாரியானார்.
இவர் நர்னால் மாவட்டத்திற்கு அருகிலுள்ள தத்வாடி கிராமத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் ஆயுஷ் யாதவை மணந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். You May Like This Video |