69 குழந்தைகளை பெற்றெடுத்து சாதனை படைத்த பெண்.., யார் தெரியுமா?
தற்போதைய காலகட்டத்தில் ஒரு குழந்தையை பெற்றெடுத்து அவர்களை பாதுகாப்பாக வளர்ப்பதே மிகவும் சவாலானது.
இருப்பினும் பாட்டி காலகட்டத்தில் ஒவ்வொருவரும் 2 முதல் 10 குழந்தைகள் வரை கூட பெற்றெடுத்து நன்றாக வளர்த்தார்கள்.
அதன்படி, உலகின் அதிக குழந்தைகளைப் பெற்ற தாய் என்ற சாதனைக்குரியவர் ரஷ்யாவைச் சேர்ந்த வாலண்டினா வாசிலியேவ்.

ரஷ்யாவைச் சேர்ந்த வாலண்டினா வாசிலியேவ், உலகின் அதிக குழந்தைகளைப் பெற்ற தாய் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இவர் 1725 மற்றும் 1765க்கு இடைப்பட்ட 40 ஆண்டுகளில் 27 முறை பிரசவித்து, மொத்தம் 69 குழந்தைகளுக்குத் தாயான ரஷ்யாவின் ஷுயா நகரைச் சேர்ந்த அவரும் அவரது கணவர் ஃபியோடர் வாசிலியேவும், 76 வயதில் இறப்பதற்குமுன், மொத்தம் 69 குழந்தைகளை பெற்றெடுத்தனர்.
கின்னஸ் உலக சாதனைகளின்படி, வாலண்டினா முதன் முதலில் 1725 ஆம் ஆண்டிலும், கடைசியாக 1765 ஆம் ஆண்டிலும் குழந்தை பெற்றார்.

இந்த மதிப்பீட்டின்படி, அவர் 76 வயதில் இறப்பதற்கு முன்பு 18 முதல் 40 ஆண்டுகள் வரை கர்ப்பமாக இருந்திருப்பார்.
வாலண்டினா நான்கு முறை 4 குழந்தைகளையும், ஏழு முறை 3 குழந்தைகளையும், 16 முறை இரட்டைக் குழந்தைகளையும் பெற்றெடுத்தார்.
இத்தனை பிரசவங்களில் ஒரு ஜோடி இரட்டைக் குழந்தைகள் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டனர்.
வாலண்டினாவுடன் பெற்ற 69 குழந்தைகள் மட்டுமின்றி, அவரது கணவர் ஃபியோடோர் தனது இரண்டாவது மனைவியுடன் மேலும் 18 குழந்தைகளைப் பெற்றிருந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |