பிரித்தானியாவில் எடை அதிகரித்து கொண்டே சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி! எச்சரிக்கை தகவல்
பிரித்தானியாவில் எடை கூடிக் கொண்டே சென்ற பெண் மருத்துவ பரிசோதனை செய்த போது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
பிரித்தானியாவின் Merseyside-ல் உள்ள Litherland பகுதியில் தனது கணவருடன் வசித்து வருபவர் தான் Abby Younis.
நிதி ஆலோசகராக வேலை செய்து வரும் Abby Younis, இந்த ஆண்டின் துவக்கத்தில் தன்னுடைய உடலில் ஒரு வித மாற்றத்தைக் கண்டார். அதன் பின் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற போது, அவருக்கு புற்றுநோய் இருப்பதைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நான் தொடர்ந்து வேலை செய்து கொண்ட வந்ததால், ஒற்றைத் தலைவலி மற்றும் சோர்வாக இருப்பது போன்று உணர்ந்தேன்.
இதனால் தனக்கு ஓய்வு வேண்டும் என்று எண்ணி, நேரம் ஒதுக்கி குடும்பத்தினருடன் தன் விடுமுறையை கழித்தேன்.
நான் உடற்பயிற்ச்சி மேற்கொண்டும், என்னுடைய எடை அதிகரித்துக் கொண்டே சென்றது. சரியாக சுவாசிக்க முடியாமல் அவதிப்பட்டேன். விடுமுறைக்கு முடிந்து திரும்பிய பின்பும், என் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததது. என் அடி வயிற்றில் வலி ஏற்பட்டது.
ஒரு சில நேரங்களில் என்னால் நகர கூட முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் நான் மருத்துவரை பார்க்க முடிவு செய்தேன்.
இதைத் தொடர்ந்து Royal Liverpool University மருத்துவமனைக்கு சென்றேன்.
நான் மருத்துவர்கள் எதுவும் இல்லை என்று சொல்வார்கள் என்று எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த போது, மருத்துவர்கள் வயிற்றில் ஏதோ இருப்பது போன்று இருப்பதாக கூறினர்.
அதன் பின் நான் Liverpool Women's மருத்துவமனை மற்றும் Clatterbridge Centre-க்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டேன்.
அப்போது எனக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில் நுரையீரல் எம்போலிசம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதாவது, அவளுடைய நுரையீரலில் உள்ள தமனிகளில் உள்ள ஒரு அடைப்பே மூச்சுத் திணறல் ஏற்பட்டதற்கு காரணம் என்பது தெரியவந்தது.
மேலும், நடத்தப்பட்ட இரத்தப் பரிசோதனையில், வயிற்றில் புற்றுநோய் பாதிப்பு இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறினர்.
இது புற்றுநோய் என்பதை உறுதி செய்வதற்கு ஒரே வழி அறுவை சிகிச்சை என்பதால், அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன் படி, அறுவைசிகிச்சைக்கு மூன்று வாரங்களுக்குப் பிறகு, அவளது வயிற்றில் உள்ள கட்டிகளை அகற்ற மருத்துவர்கள் அழைத்தனர்.
அப்போது மருத்துவர்கள் என்னுடைய வயிற்றில் இரண்டு வெவ்வேறு புற்றுநோய்கள் வளர்வதாக கூறியதைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்தேன். இருப்பினும், அதிர்ஷ்டவசமாக அவர்கள் புற்றுநோயை அகற்றினர்.
இதனால் என் குடலின் ஒரு பகுதியை அகற்ற வேண்டியதில்லை. அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் மீண்டும் அது தோன்றாமல் இருக்க கீமோதெரபி அளிக்கப்பட்டது.
ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், அவர் இந்த அறுவை சிகிச்சை காரணமாக ஏற்படும் சில பக்கவிளைவுகளை(மாதவிடாய் நிறுத்தம்) சமாளிக்க, புதிய லேசர் சிகிச்சையை வழங்க Liverpool மகளிர் மருத்துவமனை உபகரணங்களை வாங்க நிதி திரட்டு வருகிறார்.
இந்த சிகிச்சையானது தற்போது தனிப்பட்ட முறையில் மட்டுமே கிடைக்கிறது. இதனால் இது NHS-ல் சிகிச்சை கிடைக்கச் செய்ய தன்னால் இயன்ற அளவு பணத்தை திரட்ட இவர் முயற்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017