நான்தான் சிறுவயதில் காணாமல்போன பிரித்தானியச் சிறுமி என்று கூறிய இளம்பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள சோகம்
தான்தான் சிறுவயதில் காணாமல்போன பிரித்தானியச் சிறுமி என்று கூறிய இளம்பெண்ணுக்கு குடும்பத்தில் பெரும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
நான்தான் சிறுவயதில் காணாமல்போன பிரித்தானியச் சிறுமி
ஜேர்மனியில் வாழும், Julia Wendell (21) என்னும் இளம்பெண், தான்தான் காணாமல்போன மேட்லின் மெக்கேன் (Madeleine McCann) என்னும் பிரித்தானியச் சிறுமி என்று கூறியிருந்தார்.
2007ஆம் ஆண்டு, போர்ச்சுகல் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது தங்கள் மகளான மேட்லின் மெக்கேன் என்ற மூன்று வயதுச் சிறுமியை தவறவிட்டார்கள் கேட் மற்றும் கெர்ரி மெக்கேன் என்னும் பிரித்தானியத் தம்பதியர்.
ஜேர்மன் சிறையிலிருக்கும் Christian Brueckner என்னும் நபர் மேட்லினை கடத்தி கொலை செய்ததாக பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், இதுவரை மேட்லினுடைய உடல் கிடைக்கவில்லை, Bruecknerம் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
இந்நிலையில், ஜேர்மனியில் வாழும் Julia, தான் காணாமல்போன பிரித்தானியச் சிறுமி மேட்லினாக இருக்கக்கூடும் என்றும், தன்னிடம் அதற்கான ஆதாரம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். தன் காலிலுள்ள ஒரு அடையாளமும், தன் கண்ணிலிருக்கும் ஒரு புள்ளியும், தான் மேட்லினாக இருக்கக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் என்று கூறியிருந்தார் அவர்.
குடும்பத்தில் உருவாகியுள்ள கடும் எதிர்ப்பு
ஆனால், Juliaவின் குடும்பத்தினர், தான்தான் மேட்லின் என்று அவர் கூறியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். Juliaவை தொலைபேசியில் அழைத்த அவருடைய பாட்டி, நீ மோசமான பெண், உன்னை நான் இனி சந்திக்க விரும்பவில்லை என்று கூறி சத்தம் போட்டாராம்.
பிள்ளையை இழந்து தவிக்கும் மெக்கேன் குடும்பத்தினருக்கு போலியான நம்பிக்கையைக் கொடுப்பதால், Julia சாதாரண பெண் இல்லை, அவருக்கு ஏதோ பிரச்சினை என அவரது குடும்பத்தினர் சாடியுள்ளார்களாம்.
இன்னொரு விடயம், Julia இப்படி தான்தான் மேட்லின் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவரது காதலரும் அவரை விட்டுப் பிரிய விரும்புகிறாராம்.
Juliaவின் தாயோ, உனக்கு மன நல பிரச்சினை உள்ளது, நீ மன நல மருத்துவரைப் பார்க்கவேண்டும் என கோபமாக கூறியுள்ளாராம். தாங்கள் வாழும் வீட்டை விற்கப்போவதாக Juliaவிடம் கூறிய அவரது தாயார், இனி நாங்கள் யாரும் நீ அழைத்தால் உன்னுடம் பேசமாட்டோம், நீ எங்களுக்கு தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டாய் என்று கூறிவிட்டாராம்.
இதற்கிடையில், மேட்லினுடைய பெற்றோரோ, Julia பார்ப்பதற்கு மேட்லின் போலவே இருப்பதால், அவரை டி என் ஏ பரிசோதனை செய்துகொள்ள கோரியுள்ளார்களாம்.