பிரித்தானியாவில் மகளுடன் நடந்து சென்றுகொண்டிருந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி... இரண்டு ஆண்களைத் தேடும் பொலிசார்
இங்கிலாந்தில் பெண் ஒருவர் தன் மகளுடன் நடந்து சென்றுகொண்டிருந்தபோது இரண்டு ஆண்கள் அவர்களுக்கு எதிர் திசையிலிருந்து வந்துகொண்டிருந்திருக்கிறார்கள்.
திடீரென அந்த பெண்ணின் மகளை நோக்கி குனிந்த அந்த ஆண்கள் இருவரும் அந்த சிறுமியின் முகத்தில் வலுக்கட்டாயமாக முத்தமிட்டிருக்கிறார்கள்.
அதிர்ச்சியடைந்த அந்த பெண் அந்த ஆண்களுடன் சண்டையிட முயன்றிருக்கிறார். ஆனால், அவர்கள் சத்தமாக சிரித்தவாறே அங்கிருந்து விலகிச் சென்றிருக்கிறார்கள்.
எதிர்பாராத அந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் பொலிசாரிடம் அது குறித்து புகாரளித்திருக்கிறார்.
Lincolnshire பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ள நிலையில், CCTVகமெராவில் பதிவான காட்சிகளை வெளியிட்டு அந்த நபர்களை பொலிசார் தேடி வருகிறார்கள்.
யாருக்காவது அந்த நபர்களை அடையாளம் தெரிந்திருந்தால் தங்களிடம் தெரிவிக்குமாறு பொலிசார் பொதுமகக்ளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.