கணவரின் ஆசைக்காக பார்லர் சென்ற பெண்! எண்ணெய் தடவியதும் கொத்தாக வந்த தலைமுடி
கணவர் ஆசைப்பட்டதால் ஸ்டைலாக மாற ஆசைப்பட்டு பியூட்டி பார்லர் சென்ற பெண்ணுக்கு, எண்ணெய் தடவியதும் தலைமுடி உதிர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொத்தாக உதிர்ந்த தலைமுடி
இந்திய மாநிலம் தெலங்கானாவில் உள்ள ஐதராபாத் ஓல்ட் சிட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் ஆசைப்பட்டார் என்பதால் நீளமான தலைமுடியை ஸ்டைலாக மாற்ற நினைத்துள்ளார். அவர், அதற்காக அபிட்ஸ் பகுதியில் உள்ள பியூட்டி பார்லருக்கு சென்றுள்ளார்.
அப்போது, அங்கிருந்த அழகுக்கலை நிபுணர் ஒருவர், இவருக்கு தலையில் எண்ணெய் தடவி வெட்ட ஆரம்பித்தார்.
Representative Image
ஆனால், அவர் முடி வெட்ட ஆரம்பித்ததும் தலைமுடி உதிர ஆரம்பித்தது. பின், சிறிது நேரத்திலேயே உச்சந்தலையில் இருந்த முடிகள் கொத்தாக உதிர்ந்தன.
பியூட்டி பார்லர் மீது புகார்
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் வீட்டிற்கு சென்று தனது கணவரிடம் காண்பித்துள்ளார். அப்போது, மனைவியின் தலையில் முடி இல்லாததை பார்த்த கணவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்பு, அந்த பெண் உதிர்ந்த தனது தலைமுடியை எடுத்துக் கொண்டு காவல்நிலையம் சென்றார். அங்கு, தனது முடி உதிர்வுக்கு காரணமாக இருந்த பியூட்டி பார்லர் மீது புகார் அளித்தார்.
இந்த விவகாரத்தை பொலிசார் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் வழக்குப்பதிவு செய்து பார்லர் மீது விசாரணை நடத்த தொடங்கினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |