நாக்கில் கருப்பு ரோமம்... அரிதான பாதிப்பால் அவதிக்குள்ளான பெண்: விரிவான பின்னணி
ஜப்பானில் மலக்குடல் புற்றுநோய் சிகிச்சையை முன்னெடுத்த பெண் ஒருவர், நாளடைவில் நாக்கில் கருப்பு ரோமங்களுடன் அவதிக்குள்ளான சம்பவம் வெளியாகியுள்ளது.
பிளாக் ஹேரி நாக்கு
ஜப்பானில் சுமார் 14 மாதங்களுக்கு முன்னர் மலக்குடல் புற்றுநோய் தொடர்பான சிகிச்சையை முன்னெடுத்துள்ளார் 60 வயது பெண் ஒருவர். அவருக்கு சிகிச்சையின் ஒருபகுதியாக minocycline என்ற ஆன்டிபயாடிக் அளிக்கப்பட்டுள்ளது.
முகப்பரு முதல் நிமோனியா வரை அனைத்திற்கும் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான ஆண்டிபயாடிக் இந்த minocycline. குறித்த பெண்மணி மருத்துவர்கள் பரிந்துரைத்தபடி நாள் ஒன்றுக்கு 100mg அளவுக்கு minocycline எடுத்துக்கொண்டுள்ளார்.
Credit: casereports.bmj
ஆனால் தொடர்புடைய பெண்மணிக்கு நாளடைவில் BHT எனப்படும் பிளாக் ஹேரி நாக்கு உருவாகியுள்ளது கண்டறியப்பட்டது. மருத்துவர்களின் கூற்றுப்படி BHT என்றால், கருமையான ரோமங்களாலான நாக்கு, ஒரு தீங்கற்ற மீளக்கூடிய நிலை.
மேலும், சுவை மொட்டுகளைக் கொண்ட நாக்கின் மேற்பரப்பில் உள்ள பாப்பிலாவின் பல சிறிய செறிவூட்டப்பட்ட இறந்த சரும செல்கள் படிவதால் இது ஏற்படுகிறது. இந்த பாதிப்பின் அறிகுறி என்பது,
நிறம் மாற்றம் சுவை மற்றும்
வாயின் பின்புறத்தில் கூச்ச உணர்வு, உலோக சுவை, குமட்டல், வாய் துர்நாற்றம் அத்துடன் நிறம் மாற்றம் மற்றும் சுவை தொடர்பான அனைத்து மாற்றங்களும் உணரலாம்.
மருத்துவர்களின் விரிவான ஆய்வுகளுக்கு முடிவில், minocycline என்ற ஆன்டிபயாடிக் பயன்பாடு தான் தொடர்புடைய பெண்மணிக்கு பிளாக் ஹேரி நாக்கு உருவாக காரணம் என உறுதி செய்துள்ளனர்.
மட்டுமின்றி, 6 வாரங்கள் சிகிச்சைக்கு பின்னர் மாறுதல் ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். BHT நோயைக் கண்டறிந்து குணப்படுத்துவது எளிது என்றாலும், கறுப்பு ரோமங்கள் கொண்ட நாக்கை பார்ப்பது மிகவும் அரிது.
ஆண்களை அதிகம் பாதிக்கிறது
உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களால் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, BHT இருப்பதற்கான நிகழ்தகவு 1 மில்லியன் மக்களில் 1 ஆகும். இது உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 13% என்றே கூறுகின்றனர்.
மேலும், இந்த நோய் பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிக்கிறது. பெண்களை விட ஆண்கள் அதிகமாக மது, புகையிலை மற்றும் காஃபின் சார்ந்த நுகர்பொருட்களை உட்கொள்வதால் இந்த பாதிப்பு ஆண்களில் அதிகமாக காணப்படுகிறது என்கிறார்கள்.