குழந்தை பிறந்த 17 நாட்களுக்குப் பிறகு UPSC தேர்வை எழுதிய பெண்.., தற்போது IAS அதிகாரி
குழந்தை பிறந்த 17 நாட்களுக்குப் பிறகு UPSC தேர்வை எழுதிய IRS அதிகாரி பெண்ணை பற்றிய தகவலை பார்க்கலாம்.
யார் அவர்?
கேரளாவைச் சேர்ந்த மாளவிகா ஜி நாயர், 2020 பேட்ச்சைச் சேர்ந்த ஐஆர்எஸ் அதிகாரி. பாதுகாப்பான மற்றும் மதிப்புமிக்க வேலையைப் பெற்றிருந்தாலும், இந்திய நிர்வாகப் பணியில் (ஐஏஎஸ்) சேர வேண்டும் என்ற அவரது விருப்பமே 2024 இல் மீண்டும் தேர்வெழுதத் தூண்டியது.
இவர், UPSC 2019 இல் AIR 118 மதிப்பெண்ணும், UPSC 2022 இல் AIR 172 மதிப்பெண்ணும், பின்னர் UPSC 2024 இல் AIR 45 மதிப்பெண்ணும் பெற்றார்.
UPSC 2024 தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்தபோது, அவர் கர்ப்பமாக இருந்தார். மேலும் அவரது கர்ப்பம் காரணமாக பல உடல்நலச் சவால்களைச் சந்தித்தார்.
சவால்கள் இருந்தபோதிலும், இவர் தனது கனவுகளுக்கு உறுதியுடன் இருந்தார். குழந்தை பிறந்த 17 நாட்களுக்குப் பிறகு, மாளவிகா தனது UPSC முதன்மைத் தேர்வை எழுதினார்.
ஊடக அறிக்கைகளின்படி, அவர் செப்டம்பர் 3 ஆம் திகதி தனது குழந்தையைப் பெற்றெடுத்தார், மேலும் அவரது முதன்மைத் தேர்வு செப்டம்பர் 20 ஆம் திகதி நடைபெற்றது.
இவரது கர்ப்ப காலத்தில் இருந்த உடல்நலப் பிரச்சினைகள் அவரைப் பாதையிலிருந்து தடுக்கவில்லை; மாறாக, அவை அவரது மன உறுதியை வலுப்படுத்தின.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |