கை,கால்கள் துண்டிக்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம் மீட்பு: இலங்கையில் தமிழர் பகுதியில் பரபரப்பு
இலங்கையில் குளம் ஒன்றில் இருந்து கை,கால்கள் வெட்டப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண்ணின் சடலம் மீட்பு
நேற்று பிற்பகல் 2.11 மணியளவில் இலங்கையின் வவுனியா, தரணிக்குளம், குறிசுட்டகுளம் பகுதியில் இருந்து இளம்பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தரணிக்குளம் குறிசுட்டகுளத்தின் நீரேந்துப் பகுதியில் சடலம் ஒன்று நேற்று அழுகிய நிலையில் இளம்பெண்ணின் உடல் ஒன்று நீரில் மிதந்த நிலையில் காணப்பட்டது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஈச்சங்குளம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
பொலிஸார் விசாரணை
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் பெண்ணின் சடலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட சடலம் இரண்டு கைகளும், ஒரு காலும் சிதைந்த நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சடலம் 26 வயதுடைய பெண்ணின் சடலமாக இருக்கலாம் என்றும், அவரது இரு கைகளும் ஒரு காலும் வெட்டப்பட்டு இருக்கலாம் என்றும் காவல் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் உடல் முற்றிலுமாக சிதைந்து இருப்பதால் அடையாளம் காண முடியாத நிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |