நான்கு ஆண்டுகளாக காதலியின் முகத்தைப் பார்க்காமலே காதலித்த கனேடிய இளைஞர்... திரைப்படம் போல ஒரு சம்பவம்
திரைப்படத்தில் வருவதுபோல, நான்கு ஆண்டுகளாக தன் காதலியின் முகத்தைப் பார்க்காமலே காதலித்துள்ளார் ஒரு இளைஞர். கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்த முபினா முஸ்தபாவும் Mubina Mustafa, 28), மேதி ஈசா ஆராதூனும் (Mehdi Isa Arathoon, 27) ஒரே கல்லூரியில் படித்திருக்கிறார்கள்.
இருவருக்கும் இடையில் கொஞ்சம் கொஞ்சமாக நட்பு வளர்ந்திருக்கிறது. ஆனால், ஒரு கட்டத்தில் ஈசா ஏறொரு பெண்ணுடன் பழகத் தொடங்கியபிறகுதான், தான் அவரை எந்த அளவுக்கு காதலிக்கிறோம் என்ற உண்மை முபினாவுக்கு புரிந்திருக்கிறது.
ஆனால், இருவரும் வேவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், அதுவும் குறிப்பாக முபினா ஒரு இஸ்லாமியர் என்பதால், அவரால் தன் குடும்பத்திலுள்ள ஆண்களைத் தவிர்த்து யாருடனும் பழகவே இயலாத ஒரு சூழல். இணைந்து படிக்கும்போது வளர்ந்த நட்பு காதலாக, இதற்கிடையில் முபினாவுக்கு வயிற்றில் கட்டி ஒன்றின் காரணமாக நோய்த்தொற்று ஏற்பட, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்திருக்கிறார் அவர்.
அந்த காலகட்டத்திலும் ஈசா காட்டிய அன்பு முபினாவை நெகிழவைத்துள்ளது. இப்படி நான்கு ஆண்டுகள் கடந்த நிலையிலும், எப்போதும் முபினா பர்தா அணிந்திருப்பதால், ஒரு முறை கூட ஈசா அவரது முகத்தைப் பார்த்ததில்லை. என்றாலும், அவரை மனதார நேசித்திருக்கிறார் ஈசா.
பின்னர் பல தடைகளைக் கடந்து இறுதியாக இருவருக்கும் திருமணம் முடிந்தபிறகே தன் காதலியின், இல்லை இல்லை, மனைவியின் முகத்தை முதன்முறையாக பார்த்திருக்கிறார் ஈசா.
தன் முகத்தை காதலருக்கு பிடிக்குமோ பிடிக்காதோ என்ற பயத்திலும், நாணத்திலும் முபினா இருக்க, அவரோ முபினாவின் முகத்தைப் பார்த்து வாவ் என்றாராம்.
முகத்தைப் பார்க்காமலே அப்படிக் காதலித்தவர், தன் மனைவி ஒரு அழகு தேவதை என்று தெரிந்த பிறகு அவரது காதல் குறையுமா என்ன! இன்றும் அந்த காதல் கொஞ்சமும் மாறாமல் அழகாக வாழ்க்கை நடத்தி வருகிறார்கள் ஈசா முபினா தம்பதியர்.