பல ஆண்டுகளாக மனித எலும்புகளை இணையம் வாயிலாக விற்றுவந்துள்ள பெண்கள்
அமெரிக்காவில், பல ஆண்டுகளாக மனித எலும்புகளை இணையம் வாயிலாக விற்றுவந்துள்ள பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மனித எலும்புகளை விற்றுவந்துள்ள பெண்கள்
அமெரிக்காவின் ப்ளோரிடாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள், பல ஆண்டுகளாக மனித எலும்புகளை விற்றுவந்துள்ளனர்.
Volusia County Jail
Wicked Wonderland என்னும் பெயரில் கடை ஒன்றை நடத்திவந்த கிம்பர்லி (Kymberlee Schopper), மற்றும் ஆஷ்லீ (Ashley Lelesi) என்னும் அந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இப்படி ஒரு விடயம் நடப்பதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பொலிசார் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
Wicked Wonderland
மனித எலும்புகள், 90 டொலர்கள் முதல் 600 டொலர்கள் வரையிலான விலையில் கிடைக்கும் என அந்தப் பெண்கள் ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்துவந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |