இளம் பெண் ஓட்டிய காரினால் 9 மாத குழந்தை பரிதாப மரணம்: விசாரணையில் தெரிய வந்த விடயம்
Two women arrested in new jersey for child death of car hitting: அமெரிக்காவில் பெண்ணொருவர் காரினால் மோதியதில் ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் பார்க்கிங் பகுதியில் பெண்ணொருவர், கார் மூலம் மோதியதில் ஆண் குழந்தை உயிரிழந்தது.
நியூ ஜெர்சி
நியூ ஜெர்சியின் ஜாக்சன் டவுன்ஷிப்பில் உள்ள 'NPGS' என்ற Kosher மாளிகைக்கடை உள்ளது. இதன் வாகன நிறுத்துமிடத்தில் ஒரு பெண் தனது 9 மாத ஆண் குழந்தையையும், 5 வயது மகளையும் தள்ளுவண்டியில் வைத்து அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது கார் ஒன்று அவர்கள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் குறித்த ஆண் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
மேலும் குழந்தையும் தாயும், அவரது ஐந்து வயது மகளும் காயமடைந்தனர். இதனையடுத்து மரியா கோபோன்-குஸ்மான் (20) என்ற பெண்ணும், லசாரோ ஃப்ளோரஸ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.
குற்றச்சாட்டுகள்
மரியாவிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
பின்னர் ஓட்டுநர் உரிமம் இல்லாமலேயே வாகனத்தை இயக்கியது, மனித உயிரிழப்பிற்கு காரணமான செயல் மற்றும் வாகனத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் ஃப்ளோரஸ் மீதும் சுமத்தப்பட்டுள்ளன.
தற்போது அவர்கள் ஓஷன் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் மற்றும் சிறைக்காவல் தொடர்பான விசாரணைக்காகக் காத்திருக்கின்றனர். இதற்கிடையில், இந்த விபத்து குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |