10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி! தட்டித்தூக்கிய அவுஸ்திரேலிய மகளிர் படை
அவுஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
அன்னாபெல் சதர்லேண்ட் 129 ரன்
பெர்த்தில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி நடந்தது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 198 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, அவுஸ்திரேலிய அணி 321 ஓட்டங்கள் குவித்தது.
பும்ராவுக்கும் ஒரு மோசமான நாள் இருக்க அனுமதிக்கப்படுகிறது: இறுதிப்போட்டி குறித்து நியூசிலாந்து வீரர்
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அன்னாபெல் சதர்லேண்ட் 129 ஓட்டங்களும், எல்லிஸ் பெர்ரி 76 ஓட்டங்களும் எடுத்தனர்.
அவுஸ்திரேலியா வெற்றி
பின்னர் 125 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 149 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக பிரதிகா ராவல் (Pratika Rawal) 63 ஓட்டங்கள் எடுத்தார். லூஸி ஹாமில்டன் 3 விக்கெட்டுகளும், அன்னாபெல், அலானா கிங் மற்றும் கார்ட்னர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
25 ஓட்டங்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |