இங்கிலாந்தில் தொடர்ச்சியாக பெண்கள் தவறாக தொடப்பட்ட விவகாரம்: குற்றவாளி யார் என தெரியவந்ததால் அதிர்ச்சி
இங்கிலாந்தில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் தொடர்ச்சியாக இளம்பெண்கள் பாலியல் ரீதியாக தாக்கப்பட்ட விடயத்தால் மக்கள் கவலையில் ஆழ்ந்திருந்த நிலையில், குற்றவாளி ஒரு சிறுவன் என தெரியவந்ததையடுத்து அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்திலுள்ள Bracknell என்ற நகரில், ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில், பட்டப்பகலில், தொடர்ச்சியாக இளம்பெண்கள் பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளானதைத் தொடர்ந்து அப்பகுதியில் ஒருவித அமைதியின்மை நிலவியது.
இது தொடர்பாக தகவல் வெளியிட்ட பொலிஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர், ஜூலை 5ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, இரவு 10.50 மணி வாக்கில் South Hill Park என்ற இடத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த தன் 20 வயதுகளிலிருக்கும் பெண் ஒருவரை, ஆண் ஒருவர் தவறாக தொட்டிருக்கிறார்.
மறுநாள், 6ஆம் திகதி, புதன்கிழமை, காலை 7.30 மணிவாக்கில், South Hill Park என்ற இடத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த தனது 20 வயதுகளிலிருக்கும் பெண் ஒருவரை, சைக்கிளில் வந்த ஆண் ஒருவர் தவறாக தொட்டிருக்கிறார்.
8.20 மணியளவில், பதின்ம வயதுப் பெண் ஒருவர் South Hill Park என்ற இடத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவரை ஆண் ஒருவர் தவறாக தொட்டிருக்கிறார். குற்றவாளி ஒரு வெள்ளையினத்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது, அவரைக் குறித்து யாருக்காவது தகவல் தெரிந்தால் பொலிசாருக்கு தகவலளிக்கவேண்டும் என்று கூறியிருந்தார் பொலிஸ் செய்தித்தொடர்பாளர்.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பொலிசார் அதே Bracknell நகரில் வாழும் ஒருவரை கைது செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒரு 13 வயது பள்ளிச் சிறுவன் என தெரியவந்துள்ளதையடுத்து அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பொலிசார் அந்தச் சிறுவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.