லண்டன் கால்வாயில் பெண் சடலம் கண்டுபிடிப்பு: தேடுதலை தீவிரப்படுத்தும் பொலிஸார்
லண்டன் கால்வாயில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர்.
லண்டன் கான்வாயில் பெண் சடலம்
பிரித்தானியாவின் மேற்கு லண்டன் பகுதியில் திங்கட்கிழமை பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஃபெல்தாமில்(Feltham) உள்ள நார்தம்பர்லேண்ட் கிரசெண்ட் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 10:36 மணியளவில் பொலிஸார் அழைக்கப்பட்டதை தொடர்ந்து சவுத்தாலில்(Southall) பெண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சவுத்தாலின் புல்ஸ் பாலம் சாலையில் உள்ள கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட சடலம் 57 வயதுடைய பெண்ணின் சடலம் என்று ஊகிக்கப்பட்டுள்ளது.
பெண் ஒருவர் கைது
இந்நிலையில் பல்வேறு விசாரணைக்கு பிறகு 33 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை கொலை சந்தேகத்தின் பெயரில் கீரின்ஃபோர்ட் பாலத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதனிடையே இந்த சம்பவத்தை விசாரிக்கும் துப்பறியும் காவலர் ஒல்லி ஸ்ட்ரைட், இது தனிப்பட்ட சம்பவமாக இருக்கலாம் என்று நம்புவதாக குறிப்பிட்டார்.
Manchester Evening News
அத்துடன் நார்தம்பர்லேண்ட் கிரசெண்ட் பகுதி மற்றும் கால்வாய் பகுதியில் தேடுதல் தொடர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இதில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு எங்களது வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதுடன் தங்களது எண்ணம் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருடன் இருப்பதாக என்றும் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவரின் பெயர் மற்றும் பிற விவரங்கள் எதுவும் இதுவரை தெரியவரவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |