லண்டன் வீட்டில் இருந்து இரவில் கேட்ட பெண்ணின் அலறல் சத்தம்! கதவை உடைத்து சென்ற பொலிசார் கண்ட காட்சி
லண்டனில் உள்ள வீட்டில் காதலர் தினத்தன்று இறந்து கிடந்த பெண் வழக்கில் முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரீன்விச்சில் உள்ள வீட்டில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்பதாக கடந்த 14ஆம் திகதியன்று பொலிசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பொலிசார் அங்கு சென்று வீட்டு கதவை உடைத்து உள்ளே போன போது கத்திக்குத்து காயங்களுடன் Naomi Hunte (41) என்ற பெண் இறந்து கிடப்பதை கண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக 63 வயதான நபரை பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர். கொலை தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.
Naomi Hunte வசித்த வீட்டருகில் வசிக்கும் ஆண்ட்ரூ என்பவர் கூறுகையில், Naomi உயிரிழந்த அன்றைய இரவு அவர் வீட்டிலிருந்து கத்தும் சத்தம் பலமாக கேட்டது.
பின்னர் நாங்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தோம். அவருக்கு இப்படியொரு பயங்கரம் நடந்ததை நம்ப முடியவில்லை என கூறியுள்ளார்.
இதனிடையில் சம்பவம் நடந்த வீட்டின் வாசலில் பொலிசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.