ரயிலில் அநாதரவாகக் கிடந்த பெட்டி: திடுக்கிடவைத்த காட்சி
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், ரயில் ஒன்றில் அநாதரவாகக் கிடந்த பெட்டி மற்றும் பையை சோதனையிட்ட பொலிசார் அதிர்ச்சியடைய நேர்ந்தது.
ரயிலில் அநாதரவாகக் கிடந்த பெட்டி
உத்தரப்பிரதேசத்திலுள்ள லக்னோ நகரில், கோமதி நகர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் ஒன்றை துப்புரவுத் தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.

அப்போது, ரயில் பெட்டி ஒன்றிலுள்ள கழிவறை ஒன்றின் அருகே தகரப் பெட்டி ஒன்றும் பை ஒன்றும் அநாதரவாகக் கிடப்பதைக் கண்ட அவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க, அதிகாரிகள் பொலிசாரை அழைத்துள்ளனர்.
பொலிசார் அந்த பெட்டியையும் பையையும் பிளாட்பாரத்துக்குக் கொண்டுவந்து, பூட்டியிருந்த அந்த பெட்டியின் பூட்டை உடைத்து பெட்டியைத் திறக்க, அந்தப் பெட்டிக்குள் இளம்பெண் ஒருவரின் உயிரற்ற உடல் மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அந்தப் பெட்டியுடன் இருந்த பையை சோதனையிட்டபோது, அதற்குள் வெட்டப்பட்ட கைகளும் கால்களும் பிளாஸ்டின் பைக்குள் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
ஆனால், அந்தப் பெண்ணின் தலை அந்தப் பைக்குள்ளோ பெட்டிக்குள்ளோ இல்லை.
அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விடயம் தொடர்பில் பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ள நிலையில், அந்தப் பெட்டி மற்றும் பையுடன் ரயிலில் ஏறியது யார் என்பதை CCTV கமெராக்கள் உதவியுடன் கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |