லண்டனில் இருந்து சொந்த ஊருக்கு பறந்து வந்த இளம்பெண்! பின்னணியில் உள்ள நெகிழவைக்கும் ஒரு காரணம்
இந்தியாவில் காணாமல் போன நாயை கண்டுபிடிக்க லண்டனில் இருந்து வந்த பெண்.
நகரம் முழுவதும் போஸ்டர் ஒட்டி நாயை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.
லண்டனில் இருந்து, காணாமல் போன தனது நாயை கண்டுபிடிக்க பெண்ணொருவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் மீரட்டை சேர்ந்தவர் தினேஷ் சந்திரா மிஸ்ரா. இவரின் மகள் மேகா லண்டனில் வசித்து வருகிறார். இந்த நிலையில் தினேஷ் வீட்டில் வளர்த்து வந்த ஆகஸ்ட் என்ற பெயர் கொண்ட நாய் கடந்த செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி முதல் காணாமல் போனது.
இதையடுத்து லண்டனில் உள்ள மேகா நாயை கண்டுபிடிக்க கடந்த 1ஆம் திகதி அங்கிருந்து பறந்து சொந்த ஊருக்கு வந்தார். இதையடுத்து நாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூ. 15,000 சன்மானம் வழங்கப்படும் குடும்பத்தார் அறிவித்துள்ளனர்.
இதோடு நகரம் முழுவதும் நாயின் புகைப்படத்தை போஸ்டராக ஒட்டியுள்ளனர். மேலும் மேகா சமூகவலைதளங்களில் நாய் தொடர்பான தகவல்களை பதிவிட்டும் அதை கண்டுபிடிக்க உதவுமாறு கோரியுள்ளார். நாயை கண்டுபிடிக்கும் வரையில் ஒரு வாரம் உள்ளூரில் தங்க மேகா முடிவு செய்துள்ளார்.
Please share widely, I’m looking to find lifeline 8-year old Desi boy back home. @whatisdapoint @PoromaMunshi @nlasya @FriendicoesSECA @Manekagandhibjp pic.twitter.com/cPIZcu9ZAJ
— Megha Mishra (@mishramegha) September 26, 2022