பெண்கள் மாதந்தோறும் ரூ.7,000 பெறலாம்.., இந்திய அரசின் சூப்பரான திட்டம் தெரியுமா?
பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.7,000 பெறக்கூடிய இந்திய அரசின் சூப்பரான திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
என்ன திட்டம்?
பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் எல்ஐசியின் பீமா சகி திட்டத்தை ( LIC’s Bima Sakhi scheme) பிரதமர் நரேந்திர மோடி 9 டிசம்பர் 2024 அன்று தொடங்கி வைத்தார்.
1 மாதத்திலேயே இத்திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த 1 மாதத்திற்குள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.
எல்ஐசியின் பீமா சகி திட்டமானது 18 முதல் 70 வயது வரை உள்ள பெண்களை அதாவது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை தன்னம்பிக்கை மற்றும் அதிகாரம் பெற்றவர்களாக மாற்றும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எல்ஐசி பீமா சகி திட்டம் (LIC’s Bima Sakhi scheme)
எல்ஐசி பீமா சகி திட்டத்தின் கீழ், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு, எல்ஐசி முகவர்களாக மாற சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற்ற பீமா சகி பெண்களுக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு சம்பளம் அல்லது உதவித்தொகையை எல்ஐசி வழங்கும்.
பயிற்சியை முடித்த பிறகு, பெண்கள் எல்ஐசி முகவர்களாக பணியாற்றலாம். பட்டப்படிப்பை முடித்த பிறகு எல்ஐசியில் டெவலப்மென்ட் அலுவலராக வாய்ப்பு கிடைக்கும்.
இந்த திட்டம் தொடங்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், பீமா சகியின் மொத்த பதிவு எண்ணிக்கை 52,511ஐ எட்டியுள்ளதாக எல்ஐசி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எல்ஐசி நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சித்தார்த் மொஹந்தி கூறுகையில், “நாட்டின் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஒரு வருடத்திற்குள் குறைந்தபட்சம் ஒரு பீமா சகியையாவது பணியமர்த்துவது எங்கள் நோக்கம்.
பெண்களை பொருத்தமான திறன்களுடன் தயார்படுத்தி டிஜிட்டல் கருவிகள் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் பீமா சகி திட்டத்தை வலுப்படுகிறது" என்றார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் இரண்டு லட்சம் பீமா சகிகளை நியமிக்க எல்ஐசி இலக்கு வைத்துள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு படித்த 18 முதல் 70 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
மாதம் ரூ.7,000
எல்ஐசியின் பீமா சகி யோஜனா திட்டத்தின் கீழ், பெண்களுக்கு முதல் ஆண்டில் மாதம் ரூ.7000 உதவித்தொகை வழங்கப்படும்.
இரண்டாம் ஆண்டில் மாதம் ரூ.6000 மற்றும் மூன்றாம் ஆண்டில் ரூ.5000 உதவித்தொகை வழங்கப்படும். இது தவிர, பெண் முகவர்கள் காப்பீட்டு பாலிசிகளின் அடிப்படையில் கமிஷன் பெறலாம்.
யாரெல்லாம் தகுதி அற்றவர்கள்?
* தற்போதுள்ள முகவர் அல்லது பணியாளரின் உறவினர்கள் MCA ஆக ஆட்சேர்ப்புக்கு தகுதி பெற மாட்டார்கள்.
* மாநகராட்சியின் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கோ அல்லது மறு நியமனம் கோரும் முன்னாள் முகவர்களுக்கோ MCA திட்டத்தின் கீழ் ஏஜென்சி வழங்கப்படாது.
* தற்போதுள்ள முகவர்கள் MCA ஆக ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க முடியாது.
என்னென்ன ஆவணங்கள் தேவை?
* வயது சான்றிதழின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்
* முகவரி ஆதாரத்தின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்
* கல்வித் தகுதிச் சான்றிதழின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |