அந்த ஒற்றை கேள்வி... மகளிர் உலகக் கோப்பை அணி கேப்டனிடம் மன்னிப்பு கேட்ட பிபிசி
மொராக்கோ மகளிர் கால்பந்து கேப்டன் கிஸ்லேன் செப்பாக்கிடம் நிருபர் ஒருவர் பொருத்தமற்ற கேள்வியை கேட்டதற்கு பிபிசி தலைவர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
பிபிசி நிருபர் எழுப்பிய கேள்வி
மொராக்கோ மகளிர் கால்பந்து அணி ஜேர்மணி அணியை எதிர்கொள்ளும் முன்னர் கிஸ்லேன் செப்பாக் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில் பிபிசி நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்வி சலசலப்பை ஏற்படுத்தியது.
@reuters
மொராக்கோ அணியில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் எவரேனும் உள்ளனர்களா? மொராக்கோவில் தன்பாலின உறவு என்பது சட்டவிரோதமல்லவா? அப்படி தன்பாலின உறுப்பினர்கள் இருந்தால் அவர்களின் நிலை என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால், உடனடியாக நிர்வாகி ஒருவர் தலையிட்டு, இது முற்றிலுமான அரசியல் கேள்வி என குறிப்பிட்டு, நாம் ஏன் கால்பந்து தொடர்பில் மட்டும் கேள்வி எழுப்பக் கூடாது என விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர முயன்றுள்ளார்.
@alamy
ஆனால் அந்த நிரூபர், இல்லை இது அரசியல் சார்ந்தது அல்ல என குறிப்பிட்டு, மக்கள் சார்ந்தது, அரசியலுக்கும் இதற்கும் தொடர்பில்லை என தெரிவித்து, செப்பாக் பதில் கூறட்டும் என்றார். இந்த விவகாரம் விவாதத்தை ஏற்படுத்த, இறுதியில் பிபிசி தலைவர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |