சானிடரி நாப்கினில் போதை பொருளை மறைத்து எடுத்து வந்த பெண்! ஷாருக்கான் மகன் உள்ளிட்டோர் கைதான சம்பவத்தில் அம்பலமான தகவல்
இந்தியாவில் சொகுசு கப்பலில் போதை விருந்து நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பில் கைதான பெண்ணொருவர் சானிடரி நாப்கினில் மறைத்து போதை பொருட்களை கடத்தியது தெரியவந்துள்ளது.
மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்தில் போதை பொருள் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலையடுத்து போதை பொருள்தடுப்பு பிரிவினர் சாதாரண பயணிகளை போல் கப்பலில் பயணம் மேற்கொண்டனர்.
அப்போது பொதுவெளியில் தடை செய்யப்பட்ட போதை பொருள்களை பயன்படுத்துவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனைத்தொடர்ந்து 8 பேரை பிடித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆரியன் கானும் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து இந்த விவகாரம் பூதாகரமானது. திரைதுறையை சேர்ந்தவர்கள் மொடல் அழகிகள் இதில் கைதாகினர்.
இதனையடுத்து மும்பையின் பல பகுதியில் போதை பொருள்தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். தற்போது வரை இந்த விவகாரத்தில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் போதை மருந்துகளை சானிடரி நாப்கினில் எடுத்து வந்தது தெரியவந்துள்ளது.
அதன்படி நாப்கினில் மறைத்து வைத்தபடி போதை மருந்துகளை கப்பலுக்குள் அவர் கொண்டு வந்திருக்கிறார்.