அதிக சம்பளம் தரும் வாய்ப்பை நிராகரித்துவிட்டு UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற ஐஏஎஸ் அதிகாரி
அதிக ஊதியம் தரும் வேலை வாய்ப்பை நிராகரித்த பிடெக் பட்டதாரியான பெண் UPSC தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளார்.
பெரிய வாய்ப்பை நிராகரித்தவர்
இந்திய மாநிலமான பஞ்சாப், ஆனந்த்பூர் சாஹிப்பைச் சேர்ந்தவர் காமினி சிங்லா (23). இவரது தந்தை டாக்டர் அலோக் சிங்லா மற்றும் தாயார் டாக்டர் நீர்ஜா சிங்லா ஆகியோர் மருத்துவ பயிற்சியாளர்கள்.
இவர் தனது பள்ளிப் படிப்பை சொந்த ஊரில் முடித்து சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் (பிஇசி) கணினி அறிவியல் பொறியியலில் பி.டெக் படித்தார்.
இதையடுத்து இவர் ஜேபி மோர்கன் என்ற பன்னாட்டு நிறுவனத்தில் பயிற்சியாளராகப் பணியாற்றி முடித்த பின்னர், நிறுவனமே வேலை வழங்க முன்வந்தது.
இதனிடையே அவர் ஓட்டுநர் உரிமத்திற்காக அரசு அலுவலகத்திற்குச் சென்றபோது ஒரு மாவட்ட ஆட்சியரிடம் முறைகேடு நடந்ததை கண்டார். இதனால், அவர் சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்குத் தயாராகத் தேர்ந்தெடுத்து ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டுமென கடினமாக உழைத்தார்.
இதையடுத்து முதல் முயற்சியில் தோல்வி அடைந்தார். இருந்தாலும் நம்பிக்கையுடன் போராடி தினமும் 9 முதல் 10 மணி நேரம் படித்தார்.
இதையடுத்து, 2021-ம் ஆண்டில் UPSC தேர்வில் அகில இந்திய அளவில் 3வது இடத்தைப் பிடித்தார். இறுதியில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும் என்ற தனது கனவை அடைந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |