இரவு நேரத்தில் வீட்டிற்கு ஆண்களை அனுப்பி மிரட்டுகிறார்! தீர்த்து கட்டிடுவோம்னு சொல்றாங்க... தமிழ் சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி மீது பரபரப்பு புகார்
பிரபல சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி கந்து வட்டி கேட்டு கொடுமைப்படுத்துவதாக பெண்கள் பொலிசில் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஜெயலட்சுமி. பல்வேறு சீரியல்களிலும், சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவர் பாஜகவில் உறுப்பினராகவும் உள்ளார்.
சென்னை பாடியை சேர்ந்தவர் கீதா. இவர் ஜெயலட்சுமி மூலமாக சுயஉதவிக்குழு கடன் வாங்கி இருக்கிறார். அந்த பகுதியை சேர்ந்த பல பெண்கள் ஒன்றாக சேர்ந்து மகளிர் சுய உதவிக்குழு நடத்தி வருகிறார்கள்.
இந்த குழுவிற்கு ஜெயலட்சுமி வங்கி மூலம் 10 பைசா வட்டி விகிதத்தில் கடன் வாங்கி கொடுத்து உள்ளார். மொத்தம் 9 பெண்களுக்கு வங்கியில் இருந்து குறைந்த வட்டியில் கடன் வாங்கி இருக்கிறார். மாதா மாதம் அந்த பெண்களும் முறையாக வட்டியும், முதலுமாக இஎம்ஐ கட்டி இருக்கிறார்கள்.
ஆனால் சில மாதங்கள் கழித்து திடீரென அந்த பெண்களை சந்தித்த ஜெயலட்சுமி. நீங்கள் கொடுத்தது வட்டி மட்டும்தான் என்று கூறி உள்ளார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அந்த பெண்கள் கொடுத்த புகாரில், நாங்கள் மாதமாதம் இஎம்ஐ கட்டிய பின்பும். நாங்கள் வெறும் வட்டி மட்டும் கொடுத்ததாக நடிகை ஜெயலட்சுமி கூறுகிறார். நாங்கள் பல மாதம் பணம் கொடுத்தும் அது அனைத்தும் வட்டிக்கே கழிந்துவிட்டது, இனிதான் நீங்கள் அசலை கொடுக்க வேண்டும் என்று கூறி மிரட்டுகிறார்.
அதோடு இரவு நேரத்தில் எங்கள் வீட்டிற்கு ஆண்களை அனுப்பி மிரட்டுகிறார். எங்கள் வீட்டுக்கு அடியாட்களை அனுப்பி உங்களை தீர்த்து கட்டிவிடுவோம் என்று கூறி மிரட்டுகிறார் என குறிப்பிட்டுள்ளனர்.