மீன் பிடிக்க தூண்டில் வீசிய இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
இந்திய மாநிலம் கர்நாடகாவில் மீன் பிடிக்க தூண்டில் வீசியபோது இறந்த பெண்ணின் உடல் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டத்தில் உள்ள அரகேரே கிராமத்தில் இளைஞர் ஒருவர், பண்ணை குட்டையில் மீன் பிடிக்க தூண்டில் வீசியுள்ளார்.
அப்போது இறந்த பெண்ணின் உடல் அவரது தூண்டிலில் சிக்கியது. அதனை வெளியே எடுத்தபோது பாதியளவு உடல் மட்டுமே இருந்துள்ளது.
இதனைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். அதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சடலத்தை மீட்டனர். அப்பெண்ணிற்கு 40யில் இருந்து 45 வயதிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல், பாண்டவபுரா வட்டத்தில் பேபி கால்வாயில் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல்பாதியளவு வெட்டப்பட்ட நிலையில் மிதந்து வந்துள்ளது. இதனையறிந்த அக்கிராம மக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் இரண்டு பெண்கள் ஒரே மாதிரி கொலை செய்யப்பட்டது, அவர்களின் உடல் பாதியளவு வெட்டப்பட்டு வெவ்வேறு இடங்களில் உள்ள கால்வாய்களில் வீசப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் இரு கிராமங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.