பிரான்ஸ் உணவகத்தில் உணவருந்திய பெண்: பயங்கர நோயால் பாதிப்பு
பிரான்சிலுள்ள உணவகம் ஒன்றில் உணவருந்திய சுற்றுலாப்பயணிகள் பலர் நோய்க்கிருமி ஒன்றின் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், கனடா நாட்டவரான ஒரு பெண் இன்னமும் நோயிலிருந்து முழுமையாக விடுபட போராடிக்கொண்டிருக்கிறார்.
பாதிப்பை ஏற்படுத்திய உணவு
தென்மேற்கு பிரான்சிலுள்ள Bordeaux நகரில் அமைந்துள்ளது Tchin Tchin உணவகம். இங்கு கிடைக்கும் ஒயின் மற்றும் உணவுக்காக, சுற்றுலாப்பயணிகள் பெருமளவில் குவிவதுண்டு.
இந்நிலையில், இம்மாதம், அதாவது, செப்டம்பர் 4ஆம் திகதிக்கும் 10ஆம் திகதிக்கும் இடையில் அந்த உணவகத்தில் உணவருந்திய ஒரு பெண் உயிரிழந்துவிட்டார். அத்துடன், அதே உணவகத்தில் உணவருந்திய 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
என்ன பிரச்சினை?
பாதிக்கப்பட்ட இந்த சுற்றுலாப்பயணிகள் அனைவரும், botulism என்னும் பயங்கர பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் சாப்பிட்ட, பதப்படுத்தப்பட்ட மத்தி அல்லது சாளை மீனில், Clostridium botulinum என்னும் நோய்க்கிருமியின் பாதிப்பு இருந்துள்ளது.
Biologia Net
இந்த Clostridium botulinum என்னும் கிருமி உருவாக்கும் botulism என்னும் உயிர்க்கொல்லி நோய், அந்த பாக்டீரியா உருவாக்கும் நச்சுப்பொருளால் ஏற்படுகிறது. பதப்படுத்தும்போது சரியாக கிருமிநீக்கம் செய்யப்படாத உணவை இந்த பாக்டீரியா பாதிக்கக்கூடும்.
கனடா நாட்டுப் பெண்களுக்கு பாதிப்பு
பாதிக்கப்பட்டவர்களில் இருவர் கனடா நாட்டுப் பெண்கள். இருவரும் ரொரன்றோவைச் சேர்ந்தவர்கள் ஜூபிலி ( Jubilee Pridham) மற்றும் கேபி (Gabby Chartier) என்னும் அந்த இருவரும் இந்த botulism நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூபிலியின் காதலரான Lowell Sostomi, தன் காதலியின் நிலை குறித்து விளக்கியுள்ளார்.
ஜூபிலி, கேபி மற்றும் கேபியின் தாயார் ஆகிய மூவரும் அந்த உணவகத்தில் பதப்படுத்தப்பட்ட மத்தி மீன் சாப்பிட்ட நிலையில், அவர்கள் botulism நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மீன் உணவைச் சாப்பிட்ட மறுநாள் காலை ஜூபிலி கண் விழித்தால், பார்ப்பவை எல்லாம் இரண்டிரண்டாகத் தெரிய, மூச்சு விடவும், விழுங்கவும் கஷ்டப்பட்டிருக்கிறார் அவர். மாலை ஆனபோது, ஜூபிலி பேசும், பார்க்கும், அசையும் திறன்களை இழந்துவிட்டிருந்தார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது நிலைமையில் சற்று முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்துள்ள Lowell, என்றாலும், அவர் முழுமையாக குணமாக நீண்ட காலம் ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளதாகத் தெரிவிக்கிறார்.
toronto.ctvnews
இதற்கிடையில், அவர்கள் உணவு சாப்பிட்ட அந்த பிரெஞ்சு உணவகம் மீது மறைமுகமாக அல்லது அறியாமல் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்ததாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |