வெறும் 10 நிமிடங்களில் ரூ.105 கோடி லாபம் ஈட்டிய கோடீஸ்வர பெண்மணி
இந்தியாவின் பிரபல பங்குச்சந்தை முதலீட்டாளரான ரேகா ஜூன்ஜூன்வாலா வெறும் 10 நிமிடங்களில் ரூ.105 கோடி லாபத்தை ஈட்டியுள்ளார்.
ரூ.105 கோடி லாபம்
நவம்பர் 26 -ம் திகதி இந்திய பங்குச்சந்தைகள் மூன்றாவது அமர்வாக தங்கள் ஏற்றத்தை தொடர்ந்தன. இதில், பிரபல முதலீட்டாளரான ரேகா ஜுன்ஜுன்வாலா அதிக வருமானம் ஈட்டுபவர்களில் ஒருவராக தனித்து இருக்கிறார்.
வர்த்தகத்தின் முதல் 10 நிமிடங்களில், ரேகா ஜுன்ஜுன்வாலா (Rekha Jhunjhunwala) தனது போர்ட்ஃபோலியோவில் உள்ள டைட்டன் கம்பெனி (Titan Company) மற்றும் மெட்ரோ பிராண்ட்ஸ் (Metro Brands) ஆகிய இரண்டு பங்குகள் மூலம் ரூ.105 கோடிக்கு மேல் லாபம் ஈட்டியுள்ளார்.
1.1 பில்லியன் டொலரை நன்கொடைக்கு அள்ளிக்கொடுத்த கோடீஸ்வரர்.., அவரின் மரணத்திற்கு பிறகு சொத்து யாருக்கு?
இந்த இரு நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்து மிகக் குறுகிய காலத்தில் கணிசமான தொகையால் அவரது நிகர மதிப்பு உயர்ந்துள்ளது.
தேசிய பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கிய முதல் 10 நிமிடங்களில் டைட்டன் நிறுவனத்தின் பங்கின் விலை ரூ.20.90 உயர்ந்து, ரூ.3,310 தொடக்க விலையிலிருந்து ரூ.3,330ஐ எட்டியது.
ரேகா ஜுன்ஜுன்வாலா டைட்டனில் 4.57 கோடிக்கும் அதிகமான பங்குகளை வைத்துள்ளார். எனவே டைட்டனின் பங்கு விலை உயர்வால் வெறும் 10 நிமிடங்களில் அவரது நிகர மதிப்பில் ரூ.95.54 கோடியை சேர்த்தது.
அதேபோல், மெட்ரோ பிராண்ட்ஸ் பங்கு ஒன்றுக்கு ரூ.3.90 அதிகரித்து, ஆரம்ப வர்த்தகத்தில் ரூ.1,177.10 என்ற தொடக்க விலையில் இருந்து ரூ.1,180.95ஐ எட்டியது.
ரேகா ஜுன்ஜுன்வாலா மெட்ரோ பிராண்டுகளின் 2.61 கோடி பங்குகளை வைத்துள்ளார். இந்த விலை ஏற்றத்தால் அவரது நிகர மதிப்பு ரூ.10.18 கோடி அதிகரித்துள்ளது.
டைட்டன் மற்றும் மெட்ரோ பிராண்ட்கள் இரண்டின் லாபத்தை சேர்த்து, ரேகா ஜுன்ஜுன்வாலாவின் நிகர மதிப்பு வர்த்தகம் தொடங்கிய முதல் 10 நிமிடங்களில் ரூ.105.72 கோடி அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |