வீணான ஸ்ம்ரிதி மந்தனாவின் ஆட்டம்: இந்திய அணிக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து
மகளிர் இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மந்தனா 42 ஓட்டங்கள்
இங்கிலாந்து, இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸில் நடந்தது.
மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட, இந்திய அணி 29 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 143 ஓட்டங்கள் சேர்த்தது.
ஸ்ம்ரிதி மந்தனா (Smriti Mandhana) 51 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 42 ஓட்டங்களும், தீப்தி ஷர்மா 30 ஓட்டங்களும் எடுத்தனர். எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இங்கிலாந்து வெற்றி
பின்னர் இங்கிலாந்து அணி 21 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 116 ஓட்டங்கள் எடுக்க, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஏமி ஜோன்ஸ் (Amy Jones) 57 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்களும், டாமி பியூமண்ட் 34 (35) ஓட்டங்களும் எடுத்தனர்.
முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி அடைந்த தோல்விக்கு இந்த வெற்றியின் மூலம் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |