286 ரன் வித்தியாசத்தில் வெற்றி! 10 ஆண்டுகளில் முதல் முறை..சாதித்துக்காட்டிய மகளிர் படை
மகளிர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்து அணி 286 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
395 ஓட்டங்கள்
Mangaung Oval மைதானத்தில் நடந்த டெஸ்டில் மகளிர் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 395 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 281 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 236 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் ஹெதர் நைட் 90 ஓட்டங்கள் எடுத்தார். லபா 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இமாலய இலக்கு
351 ஓட்டங்கள் எனும் இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது.
ஆனால், லாரென் பெல் மற்றும் எக்லெஸ்டோனின் மிரட்டலான பந்துவீச்சில் 64 ஓட்டங்களுக்கு தென் ஆப்பிரிக்கா சுருண்டது.
இதன்மூலம் இங்கிலாந்து 286 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக மகளிர் இங்கிலாந்து டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |