மகளிர் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா இன்று தொடக்கம்! முதல் போட்டியில் மோதும் நியூசிலாந்து-நார்வே
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் இன்று தொடங்குகிறது.
32 அணிகள்
ஃபிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் சூலை 20 முதல் ஆகத்து 20 வரை நடைபெற உள்ளது.
மொத்தம் 32 அணிகள் இதில் பங்கேற்கின்றன. பாரம்பரிய Group Stage-நாக்அவுட் முறையில் போட்டிகள் நடைபெறும்.
John Hefti-USA TODAY Sports/Reuters
10 மைதானங்கள்
குழு நிலைக்கு (Group Stage), அணிகள் தலா நான்கு அணிகள் கொண்ட 8 குழுக்களாக சமமாக பிரிக்கப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவில் 6 மற்றும் நியூசிலாந்தில் 4 என மொத்தம் 10 மைதானங்களில் மொத்தம் 64 போட்டிகள் நடைபெற உள்ளன.
இன்று Eden Berkயில் நடக்கும் முதல் போட்டியில் நியூசிலாந்து - நார்வே அணிகள் மோதுகின்றன.
FIFA
மகளிர் உலகக்கோப்பையை வென்ற அணிகள்
- அமெரிக்கா (1991)
- நார்வே (1995)
- அமெரிக்கா (1999)
- ஜேர்மனி (2003)
- ஜேர்மனி (2007)
- ஜப்பான் (2011)
- அமெரிக்கா (2015)
- அமெரிக்கா (2019)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |