லொறிக்குள் பதுங்கியிருந்த பெண்கள்.. உடனடியாக நாடுகடத்த பிரான்ஸ் முடிவு
பிரான்சில் குளிரூட்டப்பட்ட லொறி ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட 6 பெண்களில் நால்வரை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நால்வர் வியட்நாம் நாட்டவர்கள்
புதன்கிழமை பிரான்ஸ் பொலிசாரால் மீட்கப்பட்ட அந்த 6 பெண்களில் நால்வர் வியட்நாம் நாட்டவர்கள் எனவும் எஞ்சிய இருவர் ஈராக்கியர்கள் எனவும் தெரிய வந்துள்ளது. இதில் நால்வரை அடுத்த 30 நாட்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
@bbc
ஆனால் யார் அந்த நால்வர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. மட்டுமின்றி, எஞ்சிய இருவருக்கு தங்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் புகலிடக் கோரிக்கை நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்புடைய 6 பெண்களில் ஒருவர் BBC ஊடகவியலாளரை தொடர்புகொண்டு தங்களின் நிலை குறித்து வெளிப்படுத்த, அந்த ஊடகவியலாளர் பிரான்ஸ் பொலிசாரின் உதவியை நாடியுள்ளார்.
அயர்லாந்தில் பதிவு செய்யப்பட்ட அந்த வாகனம் தங்களை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்படலாம் என்று நினைத்து குறித்த பெண்கள் லொறியில் ஏறியதாக கூறப்படுகிறது.
சாரதியும் பொலிசாருக்கு தகவல்
உண்மையில், அந்த லொறியானது டன்கிர்க்கிற்கு வாழைப்பழங்களை எடுத்துச் சென்று கொண்டிருந்தது. மட்டுமின்றி அங்கிருந்து இத்தாலி நோக்கிச் செல்லும் என்றே தெரியவந்துள்ளது.
@bbc
ஆனால், தவறான பாதையில் லொறி பயணிப்பதை கவனித்த பெண்கள், அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்தே, தொடர்புடைய பெண்களில் ஒருவர் BBC ஊடகவியலாளரை தொடர்பு கொண்டுள்ளார்.
இதனிடையே, லொறிக்குள் திடீரென்று பேசும் சத்தம் கேட்கவே, அந்த சாரதியும் சந்தேகமடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து லொறி சாரதியும் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், 6 பெண்களையும் மீட்டுள்ளனர். குளிரூட்டப்பட்ட அந்த லொறியில் அப்போது வெப்ப நிலை 6C என பதிவாகியிருந்தது. ஆனால் அதில் பதுங்கியிருந்த பெண்கள் பாதிப்பின்றி மீட்கப்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |