பிரித்தானியாவில் அதிகரிக்கும் கன்னித்தன்மை சோதனைகள்!
பிரித்தானியாவில் கன்னித்தன்மை சோதனைகள் மற்றும் ஹைமன் மறுசீரமைப்பு நடைமுறைகள் (hymen restoration procedures) இதுவரை இல்லாதா அளவிற்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நடைமுறைகளைக் கொண்ட சில பெண்கள் கட்டாய திருமணத்தின் காரணமாக இவ்வாறு நிர்பந்திக்கப்படுவதாக கூறுகிறார்கள்.
இது குறித்து மகளிர் தொண்டு நிறுவனங்கள், "சொந்த குடும்பத்தில் தங்களை கன்னித்தன்மை சோதனை செய்யுமாறு நிர்பந்திப்பாதாக, உதவி கேட்டு எங்களை அழைக்கும் இளம் பெண்களின் எண்ணிக்கை திடீரென மிகவும் அதிகரித்துள்ளது" என கூறுகின்றனர்.
கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு தனது தந்தையால் கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இளம் பெண் ஒருவர், ஸ்கை நியூஸிடம் கூறியதாவது:-
அதிக ஊடுருவும் பரிசோதனையை செய்ய வேண்டாம் என்று மருத்துவரிடம் கெஞ்சியதாகவும், அது தன்னை "அதிர்ச்சியடையச்" செய்ததாகவும், சிகிச்சை என்ற பெயரில் "மிருகத்தை விட மோசமாக" நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
பெண்கள் நல ஆர்வலர்கள், இந்த சோதனைகள் மற்றும் பெண்ணின் கன்னித்தன்மையை மீட்டெடுப்பதாகக் கூறும் ஒரு அறுவை சிகிச்சை முறை (hymenoplasty) இனி சட்டவிரோதமானதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
இந்த நடைமுறையை தடை செய்வதற்கான சட்டத்தை பிரித்தானிய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.