லண்டனில் இருந்து புறப்பட்ட விமானம்! கருங்கடலுக்கு மேலே பறந்த போது குழந்தை பெற்றெடுத்த 7 மாத கர்ப்பிணி பெண்
லண்டனில் இருந்து கேரளாவின் கொச்சிக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் இளம்பெண்ணொருவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
செவ்வாயன்று ஏர் இந்தியா விமானம் 210 பயணிகளுடன் லண்டனில் இருந்து கொச்சிக்கு கிளம்பியது.
விமானமானது கருங்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது உள்ளிருந்த 7 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
நல்லவேளையாக விமான பயணிகளில் 2 மருத்துவர்களும், 4 நர்ஸ்களும் இருந்த நிலையில் அவர்களின் உதவியுடன் கர்ப்பிணிக்கு பிரசவம் நடந்தது.
இதையடுத்து அவர் அழகான குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர் தாய் மற்றும் சேய்க்கு சிகிச்சை வழங்க வேண்டும் என்ற நோக்கில் விமானம் ஜெர்மனியின் பிராங்பர்டுக்கு அருகே உள்ள விமான நிலையத்திற்கு சென்றது.
அங்கு அப்பெண், குழந்தை மற்றும் குடும்பத்தார் கீழே இறங்கினார்கள். பின்னர் விமானமானது புறப்பட்டு சென்றது.