13 வயதில் இருந்து முகத்தில் வளரும் தாடி! சங்கடங்களை மீறி மகிழ்ச்சியோடு ஏற்று கொண்ட அழகிய இளம்பெண்
அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண்ணிற்கு முகத்தில் சிறு வயதில் இருந்தே தாடி வளர்ந்து வரும் நிலையில் அதனால் ஏற்பட்ட சங்கடங்களை கடந்து வந்து தற்போது இயற்கை கொடுத்ததை மகிழ்ச்சியோடு ஏற்று கொண்டுள்ளார்.
முகத்தில் அசாதாரண முடிவளர்ச்சி
Las Vegas-ஐ சேர்ந்தவர் Dakota Cooke (30). இளம்பெண்ணன இவருக்கு 13 வயதாக இருக்கும் போது முகத்தில் முடி வளர தொடங்கியது. அசாதாரண முடிவளர்ச்சி Dakotaக்கு மிகுந்த சங்கடத்தை கொடுத்தது.
தினமும் இரண்டு முறை முகத்தை ஷேவ் செய்வதில் இருந்து வாரம் தோறும் வாக்சிங் செய்வது வரை நிறைய அசௌகரியங்களை உணர்ந்தார். ஒரு கட்டத்தில் முகத்தில் நீண்ட தாடி வளர தொடங்கியது.
பெண்கள் தங்கள் முகத்தில் முடியை வளர்க்கக்கூடாது என்று சலூனில் உள்ள பெண்கள் தன்னிடம் சொல்லி வேதனைப்படுத்தும் அளவுக்கு முகத்தில் முடி வளர்ச்சி இருந்ததாக Dakota கூறுகிறார்.
Instagram/Dakota Cooke
தாடியை ஷேவ் செய்வதால் ஏற்படும் தடிப்பு
அவர் பல பரிசோதனைகளை மேற்கொண்ட போதும் முகத்தில் முடி வளர்வதற்கான சரியான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அட்ரீனல் சுரப்பிகள் அதிக அளவில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி செய்வதால் இவ்வாறு நிகழ்கிறது என மருத்துவர்கள் கருதுகின்றனர்.
அடிக்கடி ஷேவிங் செய்வதால் Dakota தோலில் வடுக்கள் மற்றும் தடிப்புகள் ஏற்பட்டன, அதை மேக்கப் பூசி மறைத்தார். இறுதியில் முகத்தில் தாடி வளர்வதை பற்றி கவலைப்படுவதை நிறுத்தும் நேரம் Dakotaக்கு வந்தது.
அதன்படி குடும்பத்தாரும், நண்பர்களும் தனது வாழ்க்கை பயணத்தில் உறுதுணையாக இருக்கும் நிலையில் தனது முகத்தில் முடி வளர்வதை மகிழ்ச்சியோடு ஏற்று கொண்டுள்ளார்.
Instagram/Dakota Cooke