ஜேர்மனியில் கிடைத்த புலம்பெயர்ந்த பெண்ணின் தலை? ஒரு திடுக் தகவல்
ஜேர்மன் வனப்பகுதி ஒன்றில், புலம்பெயர்ந்த பெண்ணொருவரின் தலை ஒன்று கிடைத்துள்ளதாக கூறப்படும் விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஜேர்மன் கிராமம் ஒன்றில் ஒரு பெண்ணின் துண்டிக்கப்பட்ட கைகள் கிடைத்த நிலையில், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை அறியும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுவருகிறார்கள்.
ஜேர்மனியில் கிடைத்த தலை
ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்திலுள்ள வனப்பகுதி ஒன்றில் மனிதத்தலை ஒன்று கிடைத்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் இதே பகுதியில் எரித்ரியா நாட்டவரான 32 வயது பெண்ணொருவரின் துண்டிக்கப்பட்ட கைகள் கண்டெடுக்கப்பட்டன.

2025ஆம் ஆண்டு, பெண்ணொருவரின் உடல் பாகங்கள் வெவ்வேறு இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
எரித்ரியா நாட்டவரான அந்தப் பெண், ஜேர்மனியிலுள்ள Bonn நகரிலுள்ள அகதிகள் முகாம் ஒன்றில் தன் மூன்று மாதக் குழந்தையுடன் தங்கியிருந்த நிலையில் அந்த அதிரவைக்கும் சம்பவம் நடந்தது.
அந்தக் குழந்தை Waldsolms என்னும் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்தக் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்நிலையில், தற்போது ஒரு பெண்ணின் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அது அந்த எரித்ரியா நாட்டுப் பெண்ணின் தலையாக இருக்குமா என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுவருகிறார்கள்.
இதற்கிடையில், அந்தப் பெண்ணின் கணவரான எத்தியோப்பியா நாட்டவரான 41 வயது நபர் ஒருவர், அங்கிருந்து கொண்டுவரப்பட்டு ஜேர்மனியில் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் தன் மனைவியை கொலை செய்திருக்கக்கூடும் என்னும் சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |