மகளிர் ஒருநாள் போட்டியில் 490 ஓட்டங்கள் குவித்த அணி எது தெரியுமா?
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த அணிகள் குறித்து காண்போம்.
நியூசிலாந்து
2018ஆம் ஆண்டில் நியூசிலாந்து மகளிர் அணி ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்தது.
அயர்லாந்து அணிக்கு எதிராக நடந்த அந்த ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து முதலில் ஆடியது.
அணித்தலைவர் சுஸி பேட்ஸ் 94 பந்துகளில் 151 ஓட்டங்கள் விளாசினார். மேடி கிரீன் 77 பந்துகளில் 121 ஓட்டங்கள் குவித்தார்.
இதன்மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 490 ஓட்டங்கள் குவித்தது. இதுதான் இதுவரை மகளிர் ஒருநாள் போட்டியில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
அதிக ஓட்டங்கள் குவித்த அணிகளின் பட்டியலில் நியூசிலாந்து அணியே முதல் மூன்று இடங்களை ஆக்கிரமித்துள்ளது. இந்திய அணி நான்காவது இடத்தில் உள்ளது.
மகளிர் ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த அணிகள்
- நியூசிலாந்து - 491/4
- நியூசிலாந்து 455/5
- நியூசிலாந்து 440/3
- இந்தியா - 435/5
- நியூசிலாந்து - 418
- அவுஸ்திரேலியா - 412/3
- அவுஸ்திரேலியா - 397
- இங்கிலாந்து - 378/5
- இங்கிலாந்து - 377/7
- இங்கிலாந்து - 376/2
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |