கனடாவில் பொன்னான எதிர்காலம்! கனவில் மதந்த பெண்ணிற்கு ஏற்பட்ட அதிர்ச்சி... எச்சரிக்கை செய்தி
கனடா செல்லும் கனவில் இருந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.
மோசடி கும்பலிடம் பணத்தை இழந்து ஏமாற்றத்தை சந்தித்த சம்பவம்.
கனடாவுக்கு செல்லும் கனவோடு விமான நிலையத்திற்கு வந்த பெண் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவை சேர்ந்த கிரண்தீப் என்ற பெண் கனடாவுக்கு சென்று வாழ வேண்டும் என்ற கனவில் இருந்தார். இதையடுத்து ஏஜெண்ட் மூலம் விசா, வேலை அனுமதி பத்திரம் போன்றவற்றை பெற்றுள்ளார்.
இதற்காக அவருக்கு ரூ 27 லட்சம் பணம் கொடுத்திருக்கிறார். பின்னர் கனடாவில் தனக்கு பொன்னான எதிர்காலம் இருப்பதாக கனவில் மிதந்த கிரண்தீப் விமான நிலையத்திற்கு சென்றார்.
Shutterstock
அங்கு அவரின் ஆவணங்களை சரிபார்த்த அதிகாரிகள் அனைத்தும் போலி என கண்டுபிடித்தனர். இதையடுத்து கிரண்தீப்பை கைது செய்தனர். கனடாவுக்கு போக வேண்டிய அவர் சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.
இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட ஏஜெண்ட் உள்ளிட்ட ஐவரை பொலிசார் தேடி வருகின்றனர்.