உலகில் 116 மில்லியன் பெண்கள் PCOS னால் பாதிப்பு! உலக சுகாதார தாபனத்தின் கருத்து
PCOS ஐ குறித்து பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைப்பதை கேள்விப்பட்டிருப்போம்.
இது பொதுவாக பெண்களுக்கு ஏற்படும் நோய் என்று மட்டுமே பலருக்கு தெரியும் .
அது என்ன வகையான நோய்? இதன் பாதிப்புகள் என்ன?என்பதை பற்றி பலருக்கும் தெரியாது .
முக்கியமாக பெண்கள் இதனை பற்றிய விழிப்புணர்வு பெறவில்லை,ஆகையால் அதனை பற்றி விளக்கத்தை அறிந்து கொள்ளலாம்.
PCOS என்றால் என்ன?
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) என்பது ஒரு பெண்ணின் கருப்பைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பாதிக்கும் ஒரு பொதுவான நிலை.
பாலிசிஸ்டிக் ஓவரி சின்ரோம் எனப்படும் இந்த பாதிப்பு எவ்வாறு இருக்குமெனில் உங்களுக்கு ஒழுங்கான மாதவிடாய் ஏற்படாத விடத்து, அல்லது வழமை போல அல்லாது மிகவும் அதிக நாட்களுக்கு மாதவிடாய் ஏற்படுதல், போன்றவாறு பாதிப்புகளை இது ஏற்படுத்துகிறது.
ஏன்ட்ரோஜன் எனப்படும் ஆண் ஹார்மோன் அதிகபடியாக சுரப்பதால் இப்பிரச்சினை ஏற்படுகிறது.
உலக சுகாதார தாபனத்தின் கருத்து
PCOS இன் உலகளாவிய பாதிப்பு 4% வீதம் முதல் 20% வீதம் வரை மதிப்பிடப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகள் உலகளவில் (3.4%) வீதம் பெண்கள் PCOS நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.
PCOS ன் அறிகுறிகள் என்ன?
- ஒழுங்கற்ற மாதவிடாய். அதாவது உங்கள் கருப்பைகள் தொடர்ந்து முட்டைகளை வெளியிடுவதில்லை
- பெரிய அல்லது பல நீர்க்கட்டிகள் கொண்ட கருப்பைகள்.
- மார்பு, வயிறு மற்றும் முதுகு உட்பட அதிகப்படியான உடல் முடி (ஹிர்சுட்டிசம்) எடை அதிகரிப்பு
- குறிப்பாக வயிற்றைச் சுற்றி (வயிறு) முகப்பரு அல்லது எண்ணெய் சருமம்.
- ஆண் வடிவ வழுக்கை அல்லது மெல்லிய முடி. கருவுறாமை
ஆகையால் இவ்வாறான அறிகுறிகள் ஏற்படுமிடத்து,மருத்துவரை அணுகி தகுந்த நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.