கோல்மழை பொழிந்த இந்தியா! 13யில் 5 கோல்கள் அடித்த வீராங்கனை..இமாலய வெற்றி
AFC மகளிர் ஆசியக் கிண்ண தகுதிச்சுற்றில், இந்திய அணி 13 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மங்கோலியாவை வீழ்த்தியது.
ஆசியக் கிண்ண தகுதிச்சுற்றுப் போட்டி
தாய்லாந்தில் நடந்த AFC மகளிர் ஆசியக் கிண்ண தகுதிச்சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் மங்கோலியா அணிகள் மோதின.
ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் இந்தியாவின் சங்கிதா பஸ்ஃபோர் கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து, சௌமியா குகுலோத் 20வது நிமிடத்திலும், பியாரி சேக்ஸா 29வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
பின்னர் 45வது நிமிடத்தில் பியாரி சேக்ஸா (Pyari Xaxa) மீண்டும் ஒரு கோல் அடிக்க, இந்திய அணி முதல் பாதியில் 4-0 என முன்னிலை வகித்தது.
பியாரி சேக்ஸா அபாரம்
அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதியில் இந்திய அணி இன்னும் உக்கிரமாக ஆடியது. பியாரி சேக்ஸா 46, 52 மற்றும் 55வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்கள் அடித்தார்.
அடுத்த இரண்டு நிமிடங்களில் சௌமியா கோல் அடித்தார். மங்கோலியா வீராங்கனைகள் இந்திய அணியின் தாக்குதலை சமாளிப்பதற்குள் ரிம்பா (67வது நிமிடம்), மாளவிகா (71வது நிமிடம்) கோல்கள் அடித்து தடுமாற வைத்தனர்.
மேலும் பிரியதர்ஷினி செல்லதுரை 73வது நிமிடத்தில் கோல் அடிக்க, பெனால்டி வாய்ப்பில் கிரேஸ் (75வைத்து நிமிடம்) கோல் அடித்தார்.
இமாலய வெற்றி
அதன் பின்னர் 86வது நிமிடத்தில் பிரியதர்ஷினி மீண்டும் ஒரு கோல் அடிக்க, இந்திய அணி 13-0 என்ற கணக்கில் இமாலய வெற்றி பெற்றது.
இதன்மூலம் AFC மகளிர் ஆசியக் கிண்ணம், இறுதிச் சுற்று மற்றும் தகுதிச்சுற்றுகளில் இந்தியா மிகப்பெரிய வெற்றியைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்பு 1997 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் 10-0 என்ற கணக்கில் Guamஐ வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.
A massive win for the #BlueTigresses 🐯 #MNGIND #WAC2026 #IndianFootball ⚽ pic.twitter.com/PbUMlLIAdm
— Indian Football Team (@IndianFootball) June 23, 2025
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |