முதலாவது இளையோர் ஆசியக் கிண்ணம்: மகுடம் சூடி சாதித்த இந்திய மகளிர்படை
மலேசியாவில் நடந்த மகளிர் இளையோர் ஆசியக் கிண்ணப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது.
முதலாவது மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர் மலேசியாவில் நடந்தது. இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
A 𝕗𝕚𝕘𝕙𝕥𝕚𝕟𝕘 𝕗𝕚𝕗𝕥𝕪 from G Trisha, building a solid base for her team in the all important finals! 💪 💯#ACCWomensU19AsiaCup #ACC #INDWvsBANW pic.twitter.com/ieDsY2JSfd
— AsianCricketCouncil (@ACCMedia1) December 22, 2024
இந்திய கிரிக்கெட் அணி முதலில் துடுப்பாடியது. திரிஷா 52 ஓட்டங்கள் விளாச, இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 117 ஓட்டங்கள் எடுத்தது. பர்ஜானா ஈஸ்மின் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
Fiery spell from Farjana, as she bowled with precision and accuracy, accounting for 4 wickets in the all important finals! 🔥🇧🇩#ACC #ACCWomensU19AsiaCup #INDWvsBANW pic.twitter.com/49d2T0DA8W
— AsianCricketCouncil (@ACCMedia1) December 22, 2024
அதன் பின்னர் களமிறங்கிய வங்காளதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், 18.3 ஓவரில் 76 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்மூலம் இந்திய அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், முதலாவது இளையோர் மகளிர் ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |