அடுத்தாண்டு முதல் 2 ஐபிஎல் தொடர் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்
அடுத்தாண்டு முதல் 2 ஐ.பி.எல். தொடர் நடைபெற உள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செஉதுள்ளது.
இதுதொடர்பாக பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ள அவரிடம் இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்று கேள்வி எழுப்பபட்டது.அதற்கு இலங்கைக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்பு யார் கேப்டன்கள் என்பதை தேர்வுக்குழுவினர் அறிவிப்பார்கள்.
அடுத்த கேப்டனை முடிவு செய்வது எண் பணி கிடையாது. இருப்பினும் தேர்வுக்குழுவினர், தலைவர், செயலாளர் ஆகியோரிடம் ஆலோசனை செய்து உரிய நேரத்தில் அறிவிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்தாண்டு முதல் 2 ஐபிஎல் தொடர்கள் நடத்தப்பட உள்ளன. ஆண்களுக்கு நடத்தும் அதே நேரத்தில் பெண்களுக்கும் பிசிசிஐ பிரம்மாண்டமாக நடத்த உள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. எத்தனை அணிகள் பங்கேற்கின்றன? அணிகளுக்கான ஏலம் இன்னும் நடைபெறவில்லை. வீராங்கனைகளுக்கு இது போன்று ஏலம் நடத்தி மகளிர் ஐ.பி.எல். நடத்த உள்ளோம் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.