142 ஓட்டங்கள் இலக்கு: 99 ஓட்டங்கள் எடுத்து 1 ரன்னில் த்ரில் வெற்றி
மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிரான டி20 போட்டியில் அயர்லாந்து 1 ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது.
141 ஓட்டங்கள்
அயர்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி டப்ளினில் நடந்தது.

முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜென்னிலே க்ளாஸ்கொவ் 36 (26) ஓட்டங்கள் எடுத்தார்.
அயர்லாந்து தரப்பில் அவா கன்னிங், ஓர்லா ப்ரென்டர்கஸ்ட் தலா 2 விக்கெட்டுகளும், அலானா டல்ஸெல் மற்றும் லாரா மெக்பிரைட் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
மழை குறுக்கீடு
பின்னர் ஆடிய அயர்லாந்து அணி 14.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நின்றது.
அப்போது DLS முறைப்படி அயர்லாந்து அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அணித்தலைவர் ஓர்லா ப்ரென்டர்கஸ்ட் (Orla Prendergast) 46 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 71 ஓட்டங்கள் விளாசினார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |