மருத்துவமனையில் மாயமான குழந்தை: பின்னர் தெரியவந்த உண்மை
இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் ஒரு பெண் பிரசவித்த நிலையில் அவரது குழந்தை காணாமல் போனது.
மருத்துவமனையில் மாயமான குழந்தை
புதுடெல்லியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு ஒரு பெண் பிரசவத்துக்காக சென்றுள்ளார்.

அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து நான்கு நாட்கள் ஆன நிலையில், குழந்தையின் அத்தையான சுமன் தேவி (45) ஒரு பெண்ணை தன்னுடன் அழைத்துவந்துள்ளார்.
சோனி (43) என்னும் அந்தப் பெண், தன்னை மருத்துவமனை ஊழியர் என அறிமுகம் செய்துகொண்ட நிலையில், குழந்தைக்கு தடுப்பூசி பெற்றுக்கொள்ள உதவி செய்வதாகக் கூறியுள்ளார்.
அதற்காக, குழந்தையின் எடையைப் பார்க்கச் செல்வதாக குழந்தையைத் தூக்கிச் சென்ற சோனி மாயமாகிவிட்டார்.
குழந்தை காணாமல் போனதை புரிந்துகொண்ட அந்தப் பெண் பொலிசில் புகாரளித்துள்ளார்.
பொலிசார் CCTV கட்சிகள் மூலம் நடந்ததை உறுதி செய்துகொண்டு, குழந்தையைத் தூக்கிச் சென்ற பெண்ணை தேடத் துவங்கியுள்ளனர்.
அப்போது, அவர்களுக்கு குழந்தையின் அத்தையான சுமன் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை பொலிசார் விசாரிக்க, அவரும் சோனியும் சேர்ந்து குழந்தையை கடத்த திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

குழந்தையைக் கடத்திச் சென்ற சோனி, அந்தக் குழந்தையின் அத்தையான சுமன் வீட்டிலேயே இருக்க, அவரையும் சுமனையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், பழைய பகை ஒன்றைத் தீர்த்துக்கொள்வதற்காக சுமன் அந்தக் குழந்தையைக் கடத்த திட்டமிட்டது தெரியவந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |