காதல் திருமணம் செய்த மகள்.. மாமியாருக்கு நேர்ந்த பரிதாபம்!
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் தனது மகள் காதல் திருமணம் செய்ததால் ஏற்பட்ட தகராறில், பெண்ணின் மாமியார் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணாயிரம். இவரது மகள் காவ்யா, அதே கிராமத்தை சேர்ந்த வினித் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் கண்ணாயிரத்தின் எதிர்ப்பை மீதி திருமணம் செய்து கொண்டனர். இதனால் இருவரின் குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற கண்ணாயிரம் தனது மருமகனின் தாய் ராக்குவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் ராக்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் பயந்து போன கண்ணாயிரம் உடனே அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார், கொலை செய்து விட்டு தப்பிய கண்ணாயிரத்தை கைது செய்தனர். மேலும், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகள் காதல் திருமணம் செய்த ஆத்திரத்தால் அவரது தந்தை, தனது சம்பந்தியை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.