இந்தியப் பெண்கள் உட்பட இந்த ஆண்டில் இதுவரை கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 50
பிரித்தானியாவில், 2024ஆம் ஆண்டில், இதுவரை ஆண்களால் கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 50 ஆகியுள்ளது.
அவர்களில், இந்திய மற்றும் இந்திய வம்சாவளியினரும் அடங்குவர்.
ஆண்களால் கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை
சமீப காலமாக பிரித்தானியாவில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒரு பெண் ஒரு ஆணால் கொல்லப்படுகிறாள். ஆனாலும், அது ஒரு சிறிய செய்தியாகிறதேயொழிய, பெரிய அளவில் கவனம் ஈர்ப்பதில்லை என்னும் கவலை உருவாகியுள்ளது.
இந்த ஆண்டில், இதுவரை, பிரித்தானியாவில் ஆண்களால் கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 50 ஆகியுள்ளது.
இந்திய மற்றும் இந்திய வம்சாவளியினரும்
இந்த ஆண்டில் ஆண்களால் கொல்லப்பட்ட 50 பெண்களில் இந்திய மற்றும் இந்திய வம்சாவளியினரும் அடங்குவர்.
அவர்களுடைய பெயர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
1. Bhajan Kaur
இந்த ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி, Leicesterஇல் வழ்ந்து வந்த 76 வயதான Bhajan Kaur தனது வீட்டில் உயிரிழந்து கிடந்தார். Sindeep Singh (47) என்பவர் மீது பொலிசார் கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளார்கள்.
2. Anita Mukhey
அரசு மருத்துவமனையில் பணியாற்றிவந்த Anita Mukhey (66), இந்த ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி, லண்டனில் Jalal Debella (22) என்பவரால் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டார்.
3. Tarnjeet Riaz
கிழக்கு Leicesterஇல் வாழ்ந்துவந்த Tarnjeet Riaz (44), மே மாதம் 6ஆம் திகதி தன் வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது கொலை தொடர்பாக Raj Sidpara என்பவர் மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
4. Kulsuma Akter
Died 6 April, aged 27 கிழக்கு Bradfordஇல் வாழ்ந்து வந்த அமைதியான இளம் தாயான Kulsuma Akter (27), ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி கொலை செய்யப்பட்டார். தன் குழந்தையை தள்ளு வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு சென்றுகொண்டிருந்த அவரை Habibur Masum (25) என்னும் நபர் கொடூரமாக தாக்கிக் கொலை செய்தார்.
5. Paramjit Gosal-Gill
Buckinghamshireஇலுள்ள வீடொன்றில் வாழ்ந்துவந்த Paramjit Gosal-Gill (40), பிப்ரவரி மாதம் 23ஆம் திகதி தனது வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணம் தொடர்பாக Paul Gill என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |