கனடாவில் மாயமான பெண்! கடைசியாக அவர் காணப்பட்ட இடம் குறித்து முக்கிய தகவல்
கனடாவில் பெண் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் அது தொடர்பில் பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ரொறன்ரோ பொலிசாரே இது தொடர்பான தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி மரியா செர்வரி என்ற 57 வயதான பெண் கடந்த 24ஆம் திகதி இரவு 8 மணிக்கு Jarvis St + Queen St E பகுதியில் கடைசியாக காணப்பட்டார்.
இதன் பிறகு அவர் காணாமல் போயிருக்கிறார். மரியா காணாமல் போன போது சிவப்பு நிற ஆடை அணிந்திருந்தார் என தெரியவந்துள்ளது.
மேலும் தலையில் முடியுடன் சேர்த்து பேண்ட் போட்டிருந்தார் என பொலிசார் கூறியுள்ளனர்.
அவர் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.