மனைவி சொன்னதை நம்பி லட்சக்கணக்கில் செலவு செய்து அவரை கனடாவுக்கு அனுப்பிய கணவன்! பின் அம்பலமான ஏமாற்று வேலை
கனடாவுக்கு கணவர் பணத்தில் சென்று அவரை பெரியளவில் ஏமாற்றிய இளம்பெண் உள்ளிட்ட அவர் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் அம்ரிஸ்டரை சேர்ந்தவர் நரிந்தர்பால் சிங். இவர் பொலிசில் ஒரு புகாரை அளித்தார்.
அதில், என் மகன் ஹர்மன்பிரீத் சிங் என்பவருக்கும் ரந்தீப் கவுர் என்ற பெண்ணிற்கும் கடந்த 2018ல் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் தன்னை கனடாவுக்கு அனுப்புமாறும், அங்கு சென்றவுடன் spouse விசா மூலம் ஹர்மன்பிரீத்தை அழைத்து கொள்வதாக தெரிவித்தார்.
இதையடுத்து ரூ 19 லட்சம் செலவு செய்து என் மகன் ரந்தீப்பை கனடாவுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் கனடாவுக்கு சென்ற பின்னர் ரந்தீப் அணுகுமுறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது.
மோசமான வார்த்தைகளால் எங்களிடம் பேசி எங்களை புறக்கணிக்க தொடங்கியது எங்களுக்கு அதிர்ச்சியை தந்தது. இதற்கு அவளின் பெற்றோரும் உடந்தையாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மோசடி செய்து ஏமாற்றியதாக ரந்தீப் மற்றும் அவர் பெற்றோர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.